ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkலூலு குழுமத்திடம் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி எனப் பரவும் போலி...

லூலு குழுமத்திடம் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்தி எனப் பரவும் போலி புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: லூலு குழுமத்திடம் லஞ்சம் வாங்கிய பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை – ஜூனியர் விகடன் கழுகார்

Fact: வைரலாகும் செய்தியை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை.

லூலு குழுமத்திடம் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் செய்தி வெளியானதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

லூலு குழுமத்திடம்
Screenshot from Twitter @jaya2016maha

Twitter Link/Archived Link

லூலு குழுமத்திடம்
Screenshot from Twitter @Surya_BornToWin

Twitter Link/Archived Link

லூலு குழுமத்திடம்
Screenshot from Twitter @Dravidan_Kabali

Twitter Link/Archived Link

Screenshot from Twitter @DrSharmila15

Twitter Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறினாரா?

Fact Check/Verification

லூலு குழுமத்திடம் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் செய்தி வெளியானதாக பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தில் ஜூனியர் விகடன் பதிப்பு தேதி 21/06/2023 என்று இடம்பெற்றிருக்கும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் 21/06/2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள கழுகார் பதில்கள் பகுதியில் லூலு குழுமம் மற்றும் அண்ணாமலை குறித்து இடம்பெற்றுள்ளதா என்று ஆராய்ந்தோம்.

அதில், “மிஸ்டர் கழுகு: டெல்லி… ஆளுநர்… அமலாக்கத்துறை… மும்முனைத் தாக்குதலில் தி.மு.க!” என்கிற தலைப்பிலேயே ஜூனியர் விகடன் கழுகார் பகுதியில் கட்டுரை இடம்பெற்றுள்ளது என்பது நமக்கு உறுதியானது.

தொடர்ந்து, இதுகுறித்து ஜூனியர் விகடன் ஆசிரியர் பிரிட்டோவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் லூலு குழுமம் மற்றும் அண்ணாமலை குறித்த புகைப்படச்செய்தி ஜூனியர் விகடனில் வெளியாகியது அல்ல. நாங்கள் வெளியிட்டுள்ள கழுகார் பதில்கள் பக்கம் போலியாக மாற்றப்பட்டு பகிரப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

மேலும், உண்மையான கழுகார் பதில்கள் இடம்பெற்ற ஜூனியர் விகடன் இதழின் பக்க நகலையும் நமக்குப் பகிர்ந்துள்ளார்.

எனவே, ஜூனியர் விகடனில் அண்ணாமலை லூலூ குழுமத்திடம் லஞ்சம் பெற்றதாக கழுகார் பதில்கள் பகுதியில் வெளியானதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்று நமக்கு உறுதியானது.

Also Read: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?

Conclusion

லூலு குழுமத்திடம் அண்ணாமலை லஞ்சம் வாங்கியதாக ஜூனியர் விகடன் செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
News Report from Vikatan e-magazine, Dated June 16, 2023

Phone Conversation with I.Britto, Chief Magazine Editor, Vikatan, Dated June 19, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular