Claim: வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு – புதியதலைமுறை நியூஸ்கார்ட்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது.
சிக்கந்தர் மலை மேல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், ஆடுகோழி வெட்டி சமபந்தி விருந்து எனவும் வக்பு வாரியத்தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வக்ஃ போர்டு தலைவரின் சர்ச்சை பேச்சு. வக்ஃ போர்டுக்கு சொந்தமான சிக்கந்தர் மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி வெட்டி ‘சமபந்தி’ விருந்து வைத்து சமூகநல்லிணக்கம் பேணப்படும்
விரைவில் இதற்காக மதசார்பற்ற இயக்கங்களுடன் சேர்ந்து ஆட்சியரிடமும்,முதலமைச்சரிடமும் மனு அளிக்க உள்ளோம்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மார்ச் 01ஆம் தேதி விசிகவை திமுகவுடன் இணைக்க உள்ளாரா திருமாவளவன்?
Fact Check/Verification
சிக்கந்தர் மலை மேல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், ஆடுகோழி வெட்டி சமபந்தி விருந்து எனவும் வக்பு வாரியத்தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக தமிழக வக்பு வாரியத் தலைவராக நவாஸ் கனி எம்பி கடந்த செப்டம்பர் 19, 2024ஆம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டு தற்பொழுதும் பதவியில் உள்ளார். இந்நிலையில், ஏற்கனவே தலைவராக இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு ராஜினாமா செய்த அப்துல் ரகுமான் புகைப்படம் இந்த நியூஸ்கார்டில் இடம்பெற்றிருந்தது.

கடந்த ஜனவரி மாதம் சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் சிக்கந்தர் தர்காவில் ஆடு,கோழி வெட்டி சமபந்தி விருந்து என்று வெளியிடப்பட்டிருந்த போஸ்டரில் தேதியை மாற்றி பரப்பி வருகின்ற நிலையில் இதுகுறித்து தற்போதைய வக்பு வாரியத் தலைவரான நவாஸ் கனி மேற்கண்ட நியூஸ்கார்டில் உள்ளது போன்று எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து ஆய்வு நடத்தியபோது சிக்கந்தர் தர்கா விவகாரம் குறித்து நவாஸ் கனி பேசியிருந்தார். ஆனால், தற்போது ஆடு, கோழி பலியிடுவதாக எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை; வக்பு தலைவரான நவாஸ் கனியும் அதைப்பற்றி எந்தவித கருத்தும் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில், குறிப்பிட்ட போஸ்டர் பரவி வருவதைத் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில், “எங்களது பெயரை பயன்படுத்தி திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 18 சமபந்தி கந்தூரி என்ற பெயரில் சமுக வலைதளங்களில் பரப்படும் செய்திக்கும் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இச்செயல் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாகும். மேலும் அவதூறு செய்தியை பரப்பும் வலைதளங்களில் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, முன்னாள் வக்பு வாரியத் தலைவர் புகைப்படத்தைப் பயன்படுத்தி புதியதலைமுறை பெயரில் இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது. இதுதொடர்பாக புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் இந்த நியூஸ்கார்டினை புதியதலைமுறை வெளியிடவில்லை” என்று தெரிவித்ததுடன் அது போலியானது என்று முத்திரையிட்டு நமக்கு அனுப்பி வைத்தார்.

எனவே, வக்பு வாரியத்தலைவர் சர்ச்சை பேச்சு என்று பரவும் புதியதலைமுறை போலியாக பரவி வருகிறது என்பது உறுதியாகிறது.
Also Read: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் எடிட் வீடியோ!
Conclusion
சிக்கந்தர் மலை மேல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும், ஆடுகோழி வெட்டி சமபந்தி விருந்து எனவும் வக்பு வாரியத்தலைவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with, Ivani, Puthiyathalaimurai, Dated February 11, 2025
Tamil Nadu Waqf Board
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)