வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024

HomeFact Checkபாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் எனப்பரவும் தவறான தகவல்!

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் எனப்பரவும் தவறான தகவல்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகள் என்பதாக புகைப்படச் செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிறது.

பாஜக
Source: Facebook

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்பான செய்திகளும், அவர் கூறியதாக போலியான கருத்துக்களின் பரவலும் சமூகவலைத்தளங்களில் பரவலாவது சகஜம்.

அவ்வகையில், அவர் சார்ந்துள்ள கட்சியை ஆதரிக்கும் சமூகவலைத்தளவாசிகள் மற்றும் கட்சியினர் சிலரே, “இன்று மரியாதைக்குரிய மாநில தலைவர் திரு அண்ணாமலை குழந்தை அர்ஜுன் பிறந்தநாள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அர்ஜுன் அண்ணாமலை.இறைவன் அருளால் வாழ்க வாழ்க பல்லாண்டு” என்பதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்றினை சமூகவலைத்தளங்களில் ப்கிர்ந்து வருகின்றனர்.

பாஜக
Source: Facebook

Facebook Link

பாஜக
Source: Facebook

Facebook Link

Source: Twitter
Source: Twitter

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பேரறிவாளன் விடுதலையானதால் சுப்ரமணியன் சுவாமிக்கு மாரடைப்பு?

Fact Check/Verification

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதாகப் பரவுகின்ற புகைப்படத் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

அப்போது, பாஜகவைச் சேர்ந்த சங்கர் என்கிற தென்காசி நிர்வாகி தனது ட்விட்டர் பக்கத்தில் ”நண்பர்களே சமூக வலைதளத்தில் சில தவறான தகவல் வருகின்றன. இந்த படத்தில் இருப்பது என்னுடைய மகன் விதுன்கணேஷ் மாநில தலைவர் அண்ணன் அண்ணாமலை IPS அவர்களிடம் ஆசி வாங்கிய போட்டோ…
இனி யாரும் தவறுதலாக பதிவு செய்ய வேண்டாம்”
என்று பதிவிட்டுள்ளார்.

Source: Twitter

மேலும், இந்த விளக்கத்திற்கு முன்பாகவே “இன்று (17.5.2022) என்னுடைய மகன் #விதுன்கணேஷ் அவர்களின் 5_வது பிறந்தநாள். சொந்தங்களின் வாழ்த்துக்களாக!” என்கிற வாசகங்களுடன் வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Source: Twitter

தொடர்ந்து இதுகுறித்து அண்ணாமலை தரப்பில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவரது முதன்மை செயலாளர் பிரபாகர், குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் குழந்தை அண்ணாமலையுடையது அல்ல; பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவருடைய குழந்தை; தவறுதலாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குழந்தை என்பதாக பதிவிட்டுள்ளனர் என்று விளக்கமளித்தார்.

Conclusion

பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதாகப் பரவுகின்ற புகைப்படத் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False Connection/Partly false

Our Sources
Twitter

K.Annamalai office

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular