ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkடெல்லி மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

டெல்லி மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு என்றாரா எடப்பாடி பழனிச்சாமி?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: டெல்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்ததில் என்ன தவறு? – எடப்பாடி பழனிச்சாமி 

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

டெல்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.

”டெல்லி நிர்வாக திருத்த மசோதாவால், அந்த மாநில மக்களுக்கு நல்லதே நடக்கும். அதனால்தான் வாக்களித்தோம். பாஜக கொண்டுவரும் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிக்கும் -எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot from Facebook/pvetri

Facebook Link

Screenshot from Twitter @thechanakkiyan

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தகைசால் தமிழர் விருது வேண்டாம் என்று கூறினாரா கி.வீரமணி?

Fact Check/Verification  

டெல்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக  வாக்களித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அவர்களுடைய பக்கத்தில் அவ்வாறு எந்த நியூஸ்கார்டும் இடம் பெற்றிருக்கவில்லை.

PT News Card
Fake News Card

எனவே, புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது; அவ்வாறு ஒரு செய்தியை நாங்கள் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.

Also Read: ஹரியானா வன்முறையுடன் தொடர்புடையதாக பரவும் 2019ஆம் ஆண்டு சூரத் கலவர வீடியோ!

Conclusion

டெல்லி நிர்வாக திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக  வாக்களித்ததில் என்ன தவறு என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False      

Our Sources
Phone Conversation With, Ivani, Puthiyathalaimurai Digital, Dated August 09, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular