செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024
செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024

HomeFact Checkகிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: முத்தையா முரளிதரனின் நளினமான நடனம்

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் நடனம் ஆடுபவர் கிரண் என்கிற நடனக்கலைஞர்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முத்தையா முரளிதரனின் நளினமான நடனம் என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from x @kingH_offl

X Link/Archived Link

Screenshot from X @saiko58791481

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வயநாடு நிலச்சரிவில் சிக்கிய குட்டிகளைக் காப்பாற்ற போராடும் தாய் நாய் என்று பரவும் 2021ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது பல்வேறு நபர்கள் இவரது பெயர் கிரண் என்பதாகப் பகிர்ந்திருந்தனர்.

அதனை அடிப்படையாகக் கொண்டு நடனக்கலைஞர் கிரண் என்பதாகத் தேடியபோது Mr.KiranJ என்கிற அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கம் நமக்குக் கிடைத்தது. அதில் கடந்த ஜூலை 25 , 2024 ஆம் தேதியன்று குறிப்பிட்ட வைரல் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

முரளிதரனின் புகைப்படம் மற்றும் கிரணின் நடன வீடியோவையும் புகைப்படங்களாக மாற்றி இணைத்து இங்கே ஒப்புமைப்படுத்திக் காட்டியுள்ளோம்.

“CAN’T GET OVER WITH THIS VIBETHANK SO MUCH BANGALORE @dance.inn.bangalore FOR SUCH A MEMORABLE DAY LOTS OF LOVE,” என்கிற வாசகத்துடன் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளப்பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் கிரண்.

Instagram will load in the frontend.

அவரது வீடியோவே முத்தையா முரளிதரன் என்று தவறாகப் பரவி வருகிறது.

 Also Read: வயநாடு நிலச்சரிவு என்று பரவும் 2020ஆம் ஆண்டு இடுக்கி புகைப்படங்கள்!

Conclusion

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் Tauba Tauba பாடலுக்கு நடனமாடுவதாகப் பரவும் வீடியோ தகவல்  தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Channel Of @MrKiranJ
Instagram Post By @mr.kiranj, Dated July 22, 2024

(இக்கட்டுரை முன்னதாக நமது நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது)


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular