ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதா? உண்மை என்ன?

ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதா? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் வகையிலான கார்ட்டூன் வெளியானதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

Image from Twitter @Ukartikgarga

“Cartoon published in a newspaper of Europe. India story told in one pic.” என்பதாக இந்த கார்ட்டூன் புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from Twitter @Ukartikgarga
Screenshot from Twitter @Vasudev00411816

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அணு உலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துருக்கி பூகம்பம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு லெபனான் வீடியோ!

Fact Check/Verification

ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் வகையிலான கார்ட்டூன் வெளியானதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஸ்பைடர்மேன் பேருந்து ஒன்றினை நிறுத்தும் கார்ட்டூனில் பிரதமர் மோடி, காங்கிரஸ், மம்தா பானர்ஜி உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும், மம்தா பானர்ஜி பெயர் எழுத்துப்பிழையுடன் இடம் பெற்றிருந்தது. ஐரோப்பிய செய்தித்தாள்களிலும் பிரதமர் மோடியை புகழும் இவ்வாறான கார்ட்டூன் வெளியானதாக எந்தவித பதிவும் இணையப்பக்கங்களில் இல்லை.

எனவே, குறிப்பிட்ட கார்ட்டூனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தியபோது அந்த கார்ட்டூன் பரவலாக மீம் உருவாக்கத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. வைரலாகும் புகைப்படமும் அப்படி ஒரு மீம் வகையைச் சார்ந்ததே என்று நம்மால் கண்டறிய முடிந்தது.

தொடர்ந்து, வைரல் கார்ட்டூனில் உள்ள ஸ்பைடர்மேன் பேருந்தை நிறுத்துவது போன்ற ஓவியம் பல்வேறு வகையிலும் மீம்களுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் உண்மையான கார்ட்டூன் யார் வரைந்தது என்பது குறித்து அறிய ஆய்வு மேற்கொண்டோம். குறிப்பிட்ட கார்ட்டூனில் அதை வரைந்த ஓவியரின் கையொப்பம் TSAI என்று இடம் பெற்றிருந்தது. எனவே, கீ-வேர்டுகள் மூலமாக அவர் குறித்து தேடினோம்.

அதன்முடிவில், SlashFilm என்கிற இணையப்பக்கதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கட்டுரை ஒன்றில் இக்கார்ட்டூனின் எடிட் செய்யப்படாத புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில், “The artwork of Francis Tsai is incredibly impressive. Check out a whole bunch more, including Wolverine, Hulk and more over at his official site, via Geek Tyrant” என்று இந்த கார்ட்டூன் பதிவிடப்பட்டிருந்தது.

Reddit பக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு, “Spectacular Spider-man art by Francis Tsai” என்று இந்த கார்ட்டூன் இடம் பெற்றிருந்தது.

மேலும், Deviantart பக்கத்தில் Francis Tsai யின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இந்த கார்ட்டூன் கடந்த 2007ஆம் ஆண்டே பதிவிடப்பட்டுள்ளது. இந்த கார்ட்டூன் குறித்த மேலும் சில இணைப்புகளை இங்கே மற்றும் இங்கே காணுங்கள்.

Francistsai என்கிற தனது ப்ளாக் பக்கத்திலும் அவர் இந்த கார்ட்டூனை கடந்த டிசம்பர் 20, 2007ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த கார்ட்டூனிலேயே வாசகங்களைச் சேர்த்து வலைத்தளவாசிகள் பலரும் மீம்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கார்ட்டூனிஸ்டான இவர் மார்வல் காமிக்ஸ் கவர் கார்ட்டூன்களுக்கு பெயர் பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து Lou Gehrig’s நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த ஏப்ரல் 23, 2015ஆம் ஆண்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர்!

Conclusion

ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதாக பரவுகின்ற புகைப்படச் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources
Post From, Reddit, Dated July 2014
Article From, UpperDeck, Dated August 25, 2015
Article From, SlashFilm, Dated February 27, 2012
Deviantart Post, Dated December 20, 2007
Post From, Francistsai.blogspot.com, Dated December 20, 2007



(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular