Fact Check
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றதா மத்திய அரசு?
Claim: மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை இலவசமாக தருகின்றது மத்திய அரசு
Fact: இத்தகவல் தவறானது என்று நிப்மெட் (NIEPMD – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) மறுத்துள்ளது.
“40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்டட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. தேவை இருக்கிறவங்க நேர்ல போய்… வருமான சான்றிதழ், ரேஷன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள அட்டை குடுத்து வாங்கிக்கலாம்” என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி அடிக்கல் நாள் அன்று கருப்பாடை அணிந்த காங்கிரஸ் எம்பிக்கள் எனப் பரவும் தவறான புகைப்படம்!
Fact Check/Verification
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை மத்திய அரசு இலவசமாக தருவதாக வைரலாகும் இத்தகவலானது கடந்த 2019 ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை காண முடிந்தது.
இதனையடுத்து நிப்மெட் (NIEPMD – National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆராய்ந்தோம். அதில் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று நிப்மெட் மறுப்பு தெரிவித்திருப்பதை காண முடிந்தது.



Also Read: தமிழகத்தில் விவசாயிகள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
மாற்றுத்திறனாளிகளுக்கு 40 ஆயிரம் மதிப்புள்ள வீல்சேரை மத்திய அரசு இலவசமாக தருவதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities Website
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)