வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact CheckHAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளதா? உண்மை என்ன?

HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெற்றுள்ளதா? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெறுவதாக புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Screenshot From Twitter @p_nikumar

”டயர்ல எலுமிச்சை வெச்சதுக்கே கதறுனானுக. இப்ப நிரந்தரமா ஆஞ்சநேயர்.இவனுக கதறலை பார்க்குறதே தனி ஆனந்தம் தான்.” என்பதாக இந்த புகைப்படத்தகவல் பரவி வருகிறது.

Screenshot From Facebook/ammuarts.ammuarts.1
Screenshot From Facebook/alexsander.shiva

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சமூக வலைத்தளங்களில் இளைஞர்களால் அதிகமாக கேலிக்குள்ளானவர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் என்று பரவும் போலித்தகவல்!

Fact Check / Verification

HAL நிறுவனத்தில் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெறுவதாக பரவுகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

Aero India 2023, பெங்களூருவில் 14வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படைத்தளத்தில் நடைபெறுகிறது. இதில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட போர் விமானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கண்காட்சியின் முதல் நாளில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பார்வைக்கு வைத்திருந்த HLFT-42 என்கிற போர் பயிற்சி விமான மாதிரியில் ஆஞ்சநேயர் படம் இடம்பெற்றிருந்தது. “The Strom Is Coming” என்கிற வாசகத்துடன் இப்படம் இடம்பெற்றிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சையைத் தொடர்ந்து இரண்டாவது நாள் கண்காட்சியில் ஆஞ்சநேயர் படம் HLFT-42 விமானத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்நிறுவனம் “எங்களுடைய விமானத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில்தான் ஆஞ்சநேயர் படம் அதில் இடம்பெற்றிருந்தது. வேறு எந்த உள்நோக்கமும் அதில் இல்லை. அப்படத்தை நாங்கள் நீக்கிவிட்டோம். அதிலும் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளது.

Also Read: பாகிஸ்தானில் மசூதியை இடித்து இரும்பு மற்றும் செங்கற்களை உணவுக்காக விற்பதாக பரவும் பொய் தகவல்!

Conclusion

HAL நிறுவனத்தின் போர் விமானத்தில் ஆஞ்சநேயர் புகைப்படம் நிரந்தரமாக இடம்பெறுவதாக பரவுகின்ற தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Twitter Post From, ANI, Dated February 14, 2023
Report From, Hindustan Times, February 15, 2023
YouTube Video From, ANI, Dated February 14, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular