Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சென்னை திருவெல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் துணை ஆய்வாளர் அகிலன் என்பவரை தாக்கியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.
சென்னை மெரீனாவில் மூன்று முஸ்லிம் இளைஞர்கள் அங்கு வந்த பெண்களுக்கு தொல்லைத் தந்ததாகவும் அதை தட்டிக்கேட்ட துணை ஆய்வாளர் அகிலன் என்பவரைக் கடுமையாகத் தாக்கியதாகவும் பதிவு ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்திற்கு பின் அகிலன் அவர்கள் பணிபுரிந்த காவல்நிலையத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் இவ்விஷயத்தை ஆராய முடிவெடுத்தோம்.
பரவும் செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய, அப்பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தோம்.
நம் தேடலில், “Tamilnadu Police” எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்புகைப்படம் பதிவிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. இப்பதிவானது 21/08/2017 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதாவது மூன்று வருடங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் அப்பதிவில்,
“மெரினாவில் குடிபோதையில் சுற்றி திரிந்த மூன்று சமூக விரோதிகளால் குடும்பத்தினருடன் வந்தவா்களுக்கு பிரச்சனை ஏற்பட தகவலறிந்து அலுவலில் உள்ள காவலர் திரு.அகிலன் தட்டி கேட்டுள்ளாா்.அதன் விளைவு சமூக விரோதிகளுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலர் தாக்கப்பட்டுள்ளார்.
கண்ணுக்கு கீழ் ஆறு தையல்.
வழக்கம் போல் பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனா்.
விடா முயற்சியுடன் போராடிய அந்த காவலரால் ஒரு சமூக விரோதியை மட்டும் பிடிக்க முடிந்தது”
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்கண்ட பதிவின் மூலம் சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெளிவாகிறது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் பரப்பப்படும் பதிவில் இருக்கும் சம்பவம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நடைப்பெற்ற சம்பவம் என்பது தெளிவாகிறது.
அதேபோல் காவலருடன் சண்டையிட்டவர்கள் முஸ்லிம் இளைஞர்கள் என்பதும் அதன்பின் காவல்நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்பதும் வடிகட்டிய பொய் என்று நமக்கு உறுதியாகிறது.
பல நூற்றாண்டுகளாக சகோதர சகோதரிகளாக பழகி வரும் இந்து முஸ்லிம்களுக்கிடையே தேவையில்லாத கசப்பை உருவாக்குவதற்காக இதுப்போன்ற பொய்யானத் தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது மிகவும் கண்டிக்கத் தக்க விஷயமாகும்
Twitter Profile: https://twitter.com/RajiIndustani/status/1299300833159331841
Facebook Profile: https://www.facebook.com/tamilnadu.police.in/photos/a.1712614522331440/1921397578119799/?type=3
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)