Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
குற்றவாளிகளை மத ரீதியாக, குறிப்பிட்ட மதங்கள் அடிப்படையில் இனம் பிரித்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட ஊடகங்கள் தடை செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால், ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்களோ, இனம் சார்ந்தவர்களோ குற்றவியல் நடைமுறைகளில் ஈடுபட்டால் அவர்கள் சார்ந்துள்ள இனக்குழுக்கள் முழுவதையுமே அதே கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற சிலரும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர்.
ஆகவே, இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுபவர்கள் மத்தியில், இதுபோன்ற இன்னல்களும் அடிக்கடி நடப்பது உண்மை.
அப்படி ஒரு குறிப்பிட்ட புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதனை, நமது வாசகர் ஒருவர் வாட்ஸ்அப் மூலமாக உண்மையறியும் சோதனைக்காகப் பகிர்ந்திருந்தார்.
அதில், “குற்றவாளிகளை மத அடிப்படையில் பிரித்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளின் அடைப்படையில் நடவடிக்கை” என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
எனவே, குறிப்பிட்ட அப்புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதனடிப்படையில், முன்னணி செய்தி ஊடகமான நியூஸ் 7 தமிழின் ஒரு செய்தி வடிவமைப்பை இப்புகைப்படத்திற்காக க்ராப் செய்து பயன்படுத்தியிருப்பது நமக்குத் தெரிய வந்தது.
மேலும், அச்செய்தியில் எழுத்துப் பிழைகளும் அதிகமாக இருந்தன. இந்நிலையில், பரவும் புகைப்படத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள வழக்கறிஞரான முகமது முஸ்தகீம் ராஜா என்பவரின் சமூக வலைத்தளப்பக்கத்தை தேடினோம்.
மேலும், அவரது முகநூல் பக்கம் நமக்குக் கிடைத்தது. கூடவே, பரவுகின்ற இப்புகைப்படத்திற்கு மறுப்பு தெரிவித்து அவர் வெளியிட்டிருந்த முகநூல் பதிவும் நமக்குக் கிடைத்தது.
https://www.facebook.com/photo?fbid=266482334823724&set=a.128431718628787
Archived Link: https://archive.vn/scrDp

குறிப்பிட்ட அப்பதிவில் அவர், “நான் தனிப்பட்ட முறையில் கொடுத்த எச்சரிக்கையை உயர்நீதிமன்றம் கொடுத்ததாக போலியாக வலம் வரும் இந்த பதிவு என்னுடையது அல்ல.” என்று தெரிவித்துள்ளார்.
எனவே, குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்படுபவர்களுக்கு மத அடையாளம் காட்டும் ஊடகங்களுக்குத் தடை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்ததாகப் பரவும் புகைப்படம் போலியானது என்பதை நமது நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
எனவே, நியூஸ்செக்கர் தமிழ் வாசகர்கள் யாரும் இதுபோன்ற செய்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.
Facebook page: https://www.facebook.com/photo?fbid=266482334823724&set=a.128431718628787
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)