ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதா இந்தியா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.

Fact: இத்தகவல் தவறானதாகும். மாலத்தீவில் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களையே இந்தியா செய்யவுள்ளது.

மாலத்தீவில் 28 தீவுகளை இந்தியா வாங்கியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.

X Link | Archive Link

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.

Archive Link

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்தாரா?

Fact Check/Verification

இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் மாலத்தீவில் 923 கோடி மதிப்பிலான திட்டங்களை இந்தியா தொடங்கியதாக இந்தியா டுடே இணையத்தளத்தில் செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் மாலத்தீவிலிருக்கும் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களை இந்தியா செய்யவிருப்பதாக தெவிக்கப்பட்டிருந்தது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மாலத்தீவு பயணத்தின்போது இத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.
Screengrab from India Today website

தொடர்ந்து தேடுகையில் இந்திய வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி வெளியீட்டிலும் இத்திட்டம் தொடர்பான செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.
Screengrab from MEA website

அதேபோல் வெளியுறவுத்துறையின அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும்Official Handover of the Water and Sewerage Facilities in 28 Island” என்று தலைப்பிட்டு இத்திட்டங்கள் காணொலி வாயிலாக தொடங்கப்படும் வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.

அந்த வீடியோவிலும் மாலத்தீவிலிருக்கும் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்கள் தொடங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.
Screengrab from YouTube video by MEA, India

இதனையடுத்து தேடுகையில் மாலத்தீவில் 28 தீவுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான திட்டங்களை இந்தியா உதவியுடன் தொடங்கியதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.

மாலத்தீவு அதிபர் அலுவலத்திலிருந்தும் வெளிவந்திருந்த செய்தி வெளியீட்டிலும் இத்திட்டம் தொடர்பான செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியது இந்தியா.
Screengrab from Maldives’ Presidence office website

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக பரவும் தகவல் தவறானது என்பதும், மாலத்தீவின் 28 தீவுகளுக்கு பயன்படவிருக்கும் திட்டம் ஒன்றையே தொடங்கவுள்ளது என்பதும் தெளிவாகின்றது.

தொடர்ந்து தேடுகையில் PIB Facheck-ம் இதை உறுதி செய்து பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.டந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

 Also Read: அக்‌ஷய் குமாருடன் குறைவான ஆடையில் செல்ஃபி எடுத்த ஜோதிகா என்று பரவும் எடிட் புகைப்படம்!

Conclusion

இந்தியா மாலத்தீவில் 28 தீவுகளை வாங்கியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். உண்மையில் இந்தியா மாலத்தீவின் 28 தீவுகளுக்கு பயன்படவிருக்கும் திட்டம் ஒன்றையே தொடங்கவுள்ளது. இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report By PTI, Dated August 10, 2024
Release By MEA, Dated August 11, 2024
YouTube Video By MEA, India, Dated August 10, 2024
X Post By Mohamed Muizzu, Dated August 10, 2024
Release By The President’s Office, Maldives, Dated August 10, 2024
X Post By PIB Factcheck, Dated August 13, 2024

(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular