Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வளம் வருபவர் ஆரத்தி. இவர் தமிழ் தவிர, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் ஒன்றில் இவரும் பங்குப்பெற்றார்.
இவர் அண்மையில் இவரது டிவிட்டர் பக்கத்தில் பாலிமர் தொலைக்காட்சியின் நியூஸ் கார்ட் ஒன்றை பகிர்ந்தார்.
அந்த நியூஸ்கார்டில், பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி ஒன்று இடம் பெற்றிருந்தது.
இதே செய்தியைப் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் இச்செய்தியை ஆராய்ந்தோம்.
பரப்பப்படும் இச்செய்திக் குறித்து அறிய, இதுத் தொடர்பாக செய்திகள் ஏதேனும் வந்துள்ளதா என்று தேடினோம். ஆனால் இவ்வாறு ஒரு உத்தரவை உச்சநீதிமன்றம் இட்டதாக எந்த ஒரு தகவலும் நம் தேடலில் கிடைக்கவில்லை.
பாலிமரில் இச்செய்தி வெளிவந்ததாக நியூஸ் கார்டு பகிரப்படுவதால், பாலிமர் சேனலின் அதிகாரப்பூர்வ இணையத்தளம், டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை முழுமையாக ஆராய்ந்தோம். ஆனால் இவை எவற்றிலும் இவ்வாறு ஒரு செய்தி வந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மேலும் பகிரப்படும் நியூஸ்கார்டில் பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துருவானது பாலிமர் தொலைக்காட்சியில் வழக்கமாக பயன்படுத்தப்படும் எழுத்துருவிலிருந்து(Font) மாறுப்பட்டுள்ளது. இதன் மூலம் பகிரப்படும் நியூஸ் கார்டானது பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டதில்லை என்று நமக்குத் தெளிவாகிறது.
மேலும் நம் தேடலில், காதல் திருமணம் செய்வது அவரவர் விருப்பம் என்றும் இதைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி ஒன்றை நம்மால் காண முடிந்தது. இச்செய்தியானது பாலிமர் நியூஸில் ஒளிப்பரப்பாயிருந்தது.
அச்செய்தி உங்களுக்காக:
நம் தேடலில், பெற்றோர் அனுமதி திருமணம் செய்தால் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.
மாறாக இதற்கு முற்றிலும் முரணாக, காதலிப்பதும் திருமணம் செய்வதும் அவரவர் சொந்த விருப்பம் என்றும் அதைத் தடுப்பவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி ஒன்றை நம்மால் காண முடிகிறது.
இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க வாய்ப்பே இல்லை. எனவே பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக பரப்படும் செய்தி பொய்யானது என்பதை தெளிவாக நம்மால் உணர முடிகிறது.
நம் விரிவான ஆய்வுக்குப்பின் பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக பரப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று உறுதியாகியுள்ளது.
Harathi’s Twitter Profile: https://twitter.com/harathi_hahaha/status/1301797263543422976
Twitter Profile: https://twitter.com/kunnathuraaru/status/1024940514104160258
Twitter Profile: https://twitter.com/VGopikrishnan4/status/1153903043315769344
Polimer News: https://www.youtube.com/watch?v=EDadLJFGi_s
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)