Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பிரான்ஸ் ஆசிரியர் சாமுவேல் பாட்டியைக் கொன்ற இளைஞரின் இறுதி ஊர்வல வீடியோ என்று கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் சாமுவேல் பாட்டி எனும் ஆசிரியர், இஸ்லாமிய இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகமது நபி அவர்கள் குறித்த கேலிச் சித்திரத்தைக் காட்டியதால் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையச் செய்த 18 வயது இளைஞரான அப்துல்லாக் ஆஞ்சோராவை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த இளைஞரின் உடல் அவரது சொந்த ஊரான செசன்யாவுக்கு கொண்டுவரப்பட்டு, அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துக் கொண்டதாக வீடியோ ஒன்று பரப்பப்படுகிறது.
இவ்வீடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒரு கொலைக் குற்றத்திற்காக கொல்லப்பட்ட இளைஞருக்கு, அதுவும் தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும ஒருவரின் உடலை ரஷ்ய நாட்டில் இருக்கும் செசன்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவருக்கு ஆயிரக்கணக்கானோரால் இறுதி மரியாதை தரப்பட்டது என்பதை கேட்கும்போது, இது நம்பும்படியான ஒரு தகவலாகத் தோன்றவில்லை.
ஆகவேதான் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த வீடியோவை ஆய்வு செய்ய முடிவெடுத்தோம்.
வைரலாகும் வீடியோவை தீவிரமாக ஆராய்ந்ததில், இவ்வீடியோவுக்கு பிரான்ஸ் ஆசிரியரைக் கொன்ற இளைஞருக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.
உண்மையில் வைரலாகும் வீடியோவானது யூசுப் டெமிர்கானோ என்பவரின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாகும். புனோவ் என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கைது சிறை தண்டனை அனுபவித்து வந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இவரின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர், இதுக்குறித்த செய்திக் குறிப்பு ஒன்றை Caucasian Knot எனும் ரஷ்ய இணையத்தளத்தில் நம்மால் காண முடிந்தது.

இதன்மூலம் பிரான்ஸ் ஆசிரியர் சாமுவேல் பாட்டியைக் கொன்ற இளைஞரின் இறுதி ஊர்வல வீடியோ பரவும் வீடியோ முற்றிலும் தவறான வீடியோ என்பது தெளிவாகிறது.
சாமுவேல் பாட்டியை கொன்ற இளைஞரின் இறுதி ஊர்வலம் என்று பரப்பப்பப்படும் வீடியோ தவறானது என்பதையும், அது உண்மையில் யூசுப் டெமிர்கானோ என்பவரின் இறுதி ஊர்வலம் என்பதையும் நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் பரவும் இந்த வீடியோவை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Facebook Profile: https://www.facebook.com/fathimasafiyyah983/videos/2864150680532196
Caucasian Knot: https://www.kavkaz-uzel.eu/articles/323853/
BBC: https://www.bbc.com/news/world-europe-54632353
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)