ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் தருவதாக வதந்தி

சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் தருவதாக வதந்தி

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் என்று வைரலானப் பதிவு
வைரலானப் பதிவு

Fact Check/Verification

நடிகர் சூர்யா நீட் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை  கூறியப்பின் அவருக்கெதிராக பலரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் அவர்கள் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு இலட்சம் தருவதாக அறிவித்ததாகவும் அதற்கு சூர்யா, என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்கத் தயார் என்று கூறியதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதனைப் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அர்ஜூன் சம்பத்துக்கு எதிராகவும் சூர்யாவுக்கு ஆதராகவும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவலை நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முடிவெடுத்தோம்.

உண்மை என்ன?

வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மைக் குறித்த அறிய, இதுக்குறித்து நாம் தேடுகையில்  அர்ஜூன் சம்பத் அவர்களின் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோ ஒன்று நம்மில் கண்ணில் தென்பட்டது.

இவ்வீடியோவில் அர்ஜூன் சம்பத் அவர்கள் சூர்யா குறித்து அவர் கூறியதாக கூறப்படும் விஷயத்தை முழுமையாக மறுத்துள்ளார்.

அவ்வீடியோ உங்களுக்காக:

அர்ஜூன் சம்பத் அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. நன்றி: Meoz Media

அர்ஜூன் சம்பத் அவர்கள் இவ்வாறு கூறப்படாத பட்சத்தில்  எதன் அடிப்படையில் இவ்வாறு ஒரு செய்தி பரப்பப்படுகிறது என்பதை ஆராய்ந்தோம்.

இந்தக் கோணத்தில் நாம் ஆராய்ந்தபோது, இது மக்கள் கட்சியின் மாநிலத் துணை பொதுச் செயலாளர் திண்டுக்கல் தர்மா அவர்கள் பேசிய ஒரு வீடியோவை நம்மால் காண முடிந்தது.

இவ்வீடியோவில், தர்மா அவர்கள் சூர்யாவை செருப்பால் அடிப்பவருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில், மாநிலத் தலைவர்  அர்ஜூன் சம்பத் அவர்கள் கையால் தரப்படும் என்று பேசியுள்ளார்.

அவ்வீடியோ உங்களுக்காக:

https://www.youtube.com/watch?time_continue=1&v=rsLBudvdZYM&feature=emb_title
தர்மா அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. நன்றி: Pride Ravanaa

இவ்வீடியோவின் அடிப்படையிலேயே மேற்கண்ட தகவல் பரப்பப்படுகிறது என்பது நம் ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

மேலும் என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்கத் தயார் என்று சூர்யாத் தரப்பில் பதிலளித்ததாக பரப்பப்படும் செய்திக் குறித்தும் நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

சூர்யாவின் தரப்பிலிருந்து இவ்வாறு கூறியதாக பத்திரிக்கை செய்தியோ அல்லது பேட்டியோ எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

சமூக வலைத் தளத்தில் இதுக்குறித்து ஏதேனும் கூறினாரா என்பதை அறிய அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். ஆனால் அதிலும் சூர்யா அவர்கள் இவ்வாறு கூறியதற்கான எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

Conclusion

நமது விரிவான ஆய்வுக்குப்பின் அர்ஜூன் சம்பத் அவர்கள் “சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு இலட்சம் தருவதாக  கூறினார்” என்று வந்தத் தகவலும் அதற்கு சூர்யா, “என்னை அடிப்பதால் ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை ஏழை மாணவனுக்கு வழங்கத் தயார்” என்று பதிலளித்தார் என்று வந்தத் தகவலும் முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகிறது.

Result: False


Our Sources

Twitter Profile: https://twitter.com/FareethS/status/1306988738061438977

Twitter Profile: https://twitter.com/Udan_Pirappe/status/1307369152831565829

Pride Ravanaa’s YouTube Channel: https://www.youtube.com/watch?time_continue=1&v=rsLBudvdZYM&feature=emb_title

Meoz Media’s YouTube Channel: https://www.youtube.com/watch?v=InOhABxBpUo&feature=youtu.be


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular