Claim: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி ரவி என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு!
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். விகடன் தரப்பு இதை உறுதி செய்துள்ளது.
“கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம்; விஷச்சாராயம் காய்ச்சி, விற்பனை செய்த பா.ஜ.க நிர்வாகி ரவி உட்பட 8க்கும் மேற்பட்டோர் தலைமறைவு” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தினால் கட்டணம் விதிக்க உள்ளதா டிராய்?
Fact Check/Verification
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் அதிமுக நிர்வாகி பிரபு என்பவர் தேடப்படுபதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து அந்த நியூஸ்கார்டு போலியானது என்று நிரூபித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.
அச்செய்தியில் கன்னுக்குட்டி என்கிற கோவிந்தராஜ் (49), அவரது மனைவி விஜயா (42), தம்பி தாமோதரன்(40) ஆகியோர் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டதாக நிரூபித்திருந்தோம். இதன்படி பார்க்கையில் ரவி எனும் பாஜக நிர்வாகி தேடப்படுவதாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகின்றது.
இதனையடுத்து வைரலாகும் ஜூனியர் விகடனின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டில் உள்ளதால் அந்த ஊடகம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம். இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கப்படவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து ஜூனியர் விகடனின் ஆசிரியர் பிரிட்டோவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை ஜூனியர் விகடன் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்
Also Read: இத்தாலியில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு என்று பரவும் தவறான வீடியோ!
Conclusion
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி ரவி என்பவர் தேடப்படுவதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Phone Conversation with Britto, Vikatan
Newschecker Fact Check
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)