வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkகொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று பரவும் வீடியோ...

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட உடலுக்கு மரியாதை செலுத்திய சக மருத்துவர்கள்.

Fact: வைரலாகும் வீடியோ விசாகபட்டினத்தில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டதாகும்.

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமல் காங்கிரஸின் கொல்கத்தா மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட உடலுக்கு மரியாதை செலுத்திய சக மருத்துவர்கள்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

Screenshot from X @tvnitwing

X Link/Archived Link

Screenshot from X @selvinnellai87

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: 7837018555 என்கிற எண்ணை தொடர்புக் கொண்டால் இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைக்குமா?

Fact Check/Verification

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூன் 02, 2024 அன்று Hindi News 18 வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது.

“விபத்தில் உயிரிழந்த தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்த தந்தை” என்பதாக இந்த வீடியோ அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் விபத்தில் உயிரிழந்த விபின் மேத்தா என்பவரது தந்தையான பிரவீன் மேத்தா தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ததைத் தொடர்ந்து அவருடைய மகன் உடலுக்கு மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் இணைந்து இறுதி மரியாதை செலுத்தினர் என்பதாக இந்த செய்தி இடம்பெற்றுள்ளது. இதுகுறித்த மற்றொரு செய்தியை இங்கே படியுங்கள்.

குறிப்பிட்ட வீடியோவே கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்பதாகப் பரவி வருகிறது.

 Also Read: கேரளாவில் யானையின் உடலில் தீ வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் உண்மையா?

Conclusion

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சக மருத்துவர்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from, News 18 Hindi, Dated June 02, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular