Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
கும்பமேளாவைக் கண்டித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை நடு ரோட்டில் வெட்டிக் கொலை செய்ததாகப் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக உச்சத்தை அடைந்துள்ளது. முக்கியமாக, வட இந்தியாவில் பல மாநிலங்களிலும் மக்கள் மருத்துவ மனைகளில் இடமின்றி கொரோனா பாதிப்புடனும் அச்சத்துடனும் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கிட்டதட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 பாதிப்பால் இறந்துள்ளனர் என்கின்றன அதிகாரப்பூர்வ தரவுகள். இந்நிலையில்தான், பாஜக ஆட்சியில் இருக்கும் உத்ரகாண்ட்டில் கும்ப மேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது.
கூட்டம் கூட்டமாக மக்களும், சாதுக்களும் கலந்து கொள்ளும் கும்பமேளாவைக் கட்டுப்படுத்தாமல் அரசு இருப்பதன் மூலமாக பலருக்கும் மிக எளிதாக கொரோனா தொற்று ஏற்படலாம் என்கிற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், கொரோனா காலகட்டத்தில் இவ்வளவு மக்கள் ஓரிடத்தில் கூடியிருப்பது ஆபத்தானது என்று கும்பமேளாவைக் கண்டித்து விமர்சித்த பிரக்யா என்கிற பெண் பத்திரிக்கையாளர் கொலை செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று முகநூலில் வைரலாகிறது. பல்வேறு சமூக ஊடகங்களிலும் இந்த வீடியோ பரவி வருகிறது.
(Caution: The video has Sensitive content. So we don’t post the video here)
“பத்திரிக்கை நிருபரை கொலை செய்யும் காவி பயங்கரவாதிகள் தப்ளிக் ஜமாத் மீது அவதூறை சுமத்திய காவி பயங்கரவாதிகள் இன்று கும்பமேளாவிற்கு அனுமதி கொடுத்து கோரானாவை பரப்பிய இந்த அரசை கண்டித்த பத்திரிக்கை நிருபர் கொலை” என்கிற வாசகங்களுடன் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
கும்பமேளாவைக் கண்டித்த பெண் பத்திரிக்கை நிருபர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று பரவுகின்ற வீடியோ மற்றும் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதில், குறிப்பிட்ட அந்த வீடியோவில் இருப்பவர் பெண் பத்திரிக்கையாளர் இல்லை என்பது நமக்குத் தெரிய வந்தது. டெல்லி சப்தார்ஜூங் மருத்துவமனையில் வேலை செய்த நீலு மேத்தா என்கிற பெண் அவர் என்பதும், மனைவி மீதான சந்தேகத்தால் அவரை சொந்த கணவரான ஹரிஷ் மேத்தா என்பவரே கொலை செய்ததும் நமக்குத் தெரிய வந்தது. அவுட்லுக் இணையதளம் இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும், பத்திரிக்கையாளர் பிரக்யா மிஸ்ராவே இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்துள்ளார். தான் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், தான் மிகவும் பத்திரமாக இருப்பதாகவும், தான் கொலை செய்யப்பட்டதாகப் பரவும் புகைப்படம் மற்றும் வீடியோ செய்தி வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஐ அம் அலைவ்; ஐ அம் லைவ்” என்கிற வாசகத்துடன் தனது புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கும்பமேளாவைக் கண்டித்த பெண் பத்திரிக்கையாளர் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டதாகப் பரவுகின்ற வீடியோ மற்றும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Pragya Mishra: https://www.facebook.com/pragyamishralive
IE: https://www.indiatoday.in/cities/delhi/story/delhi-rohini-murder-video-pictures-caught-on-camera-man-stabs-wife-1789563-2021-04-10
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
February 8, 2025
Ramkumar Kaliamurthy
January 30, 2025
Ramkumar Kaliamurthy
January 25, 2025