Fact Check
ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?
Claim: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடை
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்று பாலிமர் நியூஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடக்கவிருக்கும் நிலையில், இன்றைய தினத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அவர்களை தகனம் செய்ய உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு அறிவிப்பு வெளிவந்ததாக எந்த ஒரு ஊடகத்திலும் செய்தி வந்திருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டை உற்றுநோக்கியதில், அதில் எடிட் செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததை காண முடிந்தது.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, வைரலாகும் நியூஸ்கார்டானது பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில்‘ராமர் கோயில் திறப்புவிழா – 10 மாநிலங்களில் விடுமுறை’ என்று தலைப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனைத் தொடர்ந்து பாலிமர் நியூஸின் ஆசிரியர் சுரேந்தரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: பென்னிகுயிக்குக்கு சிலை வைத்ததை விமர்சித்தாரா அண்ணாமலை?
Conclusion
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Tweet from Polimer News, Dated Jan 20, 2024
Phone Conversation with Surendhar, Editor, Polimer News
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)