மதுவந்தி வீடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளும், நடிகையுமான மதுவந்தியின் வீடு கடன் தொகை செலுத்தாதால் வங்கி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை இந்நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்ததாக பிபிசி தமிழ் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் நியூஸ்கார்டில்,
“வாராக் கடனுக்கு தீர்வு சீல் வைப்பதுதான் என்றால் குபேரனிடம் கடன் வாங்கிய வெங்கடேசப் பெருமாளின் ஆலயத்துக்கு சீல் வைக்க முடியுமா?
மதுவந்தியை அவமானப்படுத்துவதற்காகவே வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.”
என்று அண்ணாமலை பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



Also Read: ஹெச்.ராஜா தலைமறைவு என்று பரவும் நியூஸ்கார்டுகள் உண்மையானதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
மதுவந்தி வீடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை பிபிசி தமிழ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது. அண்ணாமலை அவர்கள், “மாநில தேர்தல் ஆணையம் ஆளும் காட்டிய எஜமான விசுவாசம் தமிழக காவல்துறையையே மிஞ்சி விட்டது. திமுகவின் இந்த தற்காலிக வெற்றி, ஜனநாயகத்தின் தோல்வி” என்று தேர்தல் ஆணையத்தையும் தமிழக காவல்துறையையும் தாக்கி பேசியதாக பிபிசி தமிழ் நியூஸ்கார்ட் ஒன்று சமீபத்தில் வெளியிட்டிருந்ததது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


பாஜகவின் அதிகாரப்பூர்வ பேச்சாளரான எஸ்ஜி சூர்யா அவர்களும், அவரது டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் நியூஸ்காரடானது போலியானது என்று பதிவிட்டுள்ளார்.
Also Read: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தமிழ்நாட்டில் இந்த ரேஷன் கட்டுப்பாடுகளை அறிவித்ததா?
Conclusion
மதுவந்தி வீடியோ குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)