ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக தென்னங்கன்றை நட்டாரா அமைச்சர்?

ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக தென்னங்கன்றை நட்டாரா அமைச்சர்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக அமைச்சர் மனோ தங்கராஜ் தென்னங்கன்றை நட்டதாகப் புகைப்பட செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஆரஞ்சு
Source: Facebook

தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் அமைச்சர் மனோ தங்கராஜ்.

இவர் சமீபத்தில் அரசு தென்னை நாற்று பண்ணையில் மரக்கன்றுகளை நடும் விழாவில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், “பார்ப்பதற்கு தென்னை மரம் போல் காட்சியளிக்கும் இதுதான் மலேசியன் ஆரஞ்சு” என்று ஆரஞ்சுப்பழம் காய்க்கு மரக் கன்றுக்கு பதிலாக அவர் தென்னை மரக்கன்றை நட்டதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ஆரஞ்சு
Source: Facebook

Facebook Link

ஆரஞ்சு
Source: Facebook

Facebook Link

ஆரஞ்சு
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக அமைச்சர் மனோ தங்கராஜ் தென்னங்கன்றை நட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அது குறித்து ஆய்வு நடத்தினோம்.

அப்போது, Malaysian orange என்பது செவ்விளனி ரகத்தில் ஒன்றினைக் குறிக்கும் தென்னைமரக்கன்று என்பது உறுதியானது. குட்டை தென்னைம்மரக்கன்று வகையச் சார்ந்த “Malaysian orange dwarf coconut” என்பதுதான் குறிப்பிட்ட புகைப்படத்தில் இருக்கும் தென்னை வகை என்பது தெரியவந்தது.

Source: YouTube

மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் “இன்று புத்தளம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு தென்னை நாற்று பண்ணையில் பத்து வகையான நாட்டு ரக தென்னை மர கன்றுகள் நடப்பட்டது.” என்கிற பதிவினை இட்டுள்ளார்.

Source: Twitter

Facebook Link

அதில் மலேஷியன் ஆரஞ்சு மற்றும் மலேஷியன் பச்சை என்கிற இரண்டு தென்னை ரகக் கன்றுகளையும் நட்டுள்ளதை புகைப்படமாகப் பதிவிட்டுள்ளார். குறிப்பிட்ட தென்னை வகைக் கன்றுகள் அவற்றின் காயின் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

இதிலிருந்து, குறிப்பிட்ட நிகழ்வில் அமைச்சர் நட்டது, மலேஷியன் ஆரஞ்சு என்பது தென்னை ரகங்களில் ஒன்று என்பது உறுதியாகிறது.

Conclusion:

ஆரஞ்சு மரக்கன்றுக்கு பதிலாக அமைச்சர் மனோ தங்கராஜ் தென்னங்கன்றை நட்டதாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.

எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Result: Misleading

Our Sources:

TNAU: https://agritech.tnau.ac.in/ta/Agriculture/oilseeds_coconut_ta.html

ICAR: https://kvk.icar.gov.in/API/Content/PPupload/k0635_100.pdf

KJ Tamil: https://tamil.krishijagran.com/farm-info/farmers-should-not-buy-unlicensed-coconut-seedlings-agriculture-officials-idea/

Hindu Tamil: https://www.hindutamil.in/news/tamilnadu/703426-minister-mano-thangaraj-2.html

YouTube: https://www.youtube.com/watch?v=65oLFiDFln0

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular