ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkதமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினாரா?

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.

“வட மாநிலங்களில் நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை குறைக்க தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் அதிக மருத்துவ இடங்களை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்க முன்வரவேண்டும்” என்று  மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாகநியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@KovaiHarish

Twitter Link | Archived Link

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Muthu Kumar

Archived Link

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/murali.tharan.9699523

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வன்னிய சாதி வெறியர்களை துப்பாக்கியால் சுடுங்கள் என்றாரா பொன்முடி?

Fact Check/Verification

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மேற்காணும் கருத்தை தெரிவித்தாரா என்பதை அறிய அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் பொது ஊடகத்தில் தேடினோம். இதில் இக்கருத்தை அவர் தெரிவித்ததாக பதிவோ, செய்தியோ நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தமிழக பாஜகவின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அக்கட்சி இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில்தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்றை பாஜக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.பாலாஜியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவரும் இந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை தெளிவு செய்தார்.

தொடர்ந்து தேடியதில் ஜி20 தொடர்பான உலகளாவிய தடுப்பூசி ஆராய்ச்சி கூட்டு விவாதத்தில் பங்கேற்று பேசிய மன்சுக் மாண்டவியா தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் தயாரிப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று பேசி இருப்பதை மத்திய தகவல் தொடர்புத் துறையின் அறிக்கையின் வாயிலாக அறிய முடிந்தது.

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Press Information Bureau

Also Read: பாஜகவை எதிர்ப்பது அதிமுக எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறினாரா?

Conclusion

தமிழ்நாட்டின் மருத்துவ இடங்களை வட மாநிலங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Tweet from BJP Tamilnadu, Dated June 6, 2023

Phone Conversation with M.S.Balaji, State Head and Operational Manager, IT Wing, Tamilnadu BJP, Dated June 16, 2023
Press Release from Press Information Bureau

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular