Fact Check
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக பரவும் தவறான வீடியோ!
Claim: குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக பரவும் வீடியோ!
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ சீனாவின் ஹோஹத் மைதானத்தில் எடுக்கப்பட்டதாகும்.
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சீதாராம் யெச்சூரிக்கு மருத்துவர்கள் இறுதி வணக்கம் செலுத்தியதாக பரவும் தவறான படம்!
Fact Check/Verification
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் சீனாவில் நடந்ததாக சினா ஃபினான்ஸ் என்றும் சீன ஊடகத்தில் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. சீன மொழியில் வெளிவந்திருந்த அந்த செய்தியை கூகுள் உதவியுடன் மொழியாக்கம் செய்து பார்த்ததில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை; சீனாவில் நடந்தது என தெரிய வந்தது.

சீனாவின் ஹோஹத் மைதானத்தில் ஆகஸ்ட் 16 அன்று பீனிக்ஸ் லெஜஸ்ட் எனும் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்ததாவும், இந்நிகழ்ச்சியின்போது பெய்த மழையில் மைதானத்தின் இருக்கைகளிள் மழைநீர் கசிந்து ஊற்றியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடுகையில் மேலும் சில சீன ஊடகங்கள் வைரலாகும் வீடியோவின் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்திகளிலும் இச்சம்பவமானது சீனாவின் ஹோஹத் மைதானத்தில் நடந்ததாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் பங்கேற்கவிருக்கின்றாரா?
Conclusion
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நீர் கசிந்ததாக பரவும் வீடியோத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் சீனாவின் ஹோஹத் மைதானத்தில் நடந்ததாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Report By Sina Finance
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)