Authors
Claim: ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக பரவும் படம்!
Fact: வைராலாகும் படம் மும்பையில் கடந்த ஆண்டு டிசம்பரில் எடுக்கப்பட்டதாகும்.
“தில்லியில் ஜி20 உச்சிமாநாடு வருகிற 9,10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், குடிசைப்பகுதிகள், பிற நாடுகளில் இருந்து வரும் தலைவர்களின் கண்ணில் படாதவாறு மறைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை தீக்கதிர் வெளியிட்டுள்ளது.
இப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அஇஅதிமுகவின் பெயர் ‘அகில பாரத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என மாற்றப்படும் என்றாரா ஈ.பி.எஸ்?
Fact Check/Verification
ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக வைரலாகும் படத்தில் “Mumbai welcomes G20 delegates” என்று குறிப்பிடப்பட்டிருந்தது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து வைரலாகும் இப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆராய்ந்தோம். அதில் ஜி 20 மாநாட்டை முன்னிட்டு மும்பையில் குடிசைப்பகுதிகள் திரையிட்டு மூடப்பட்டதாக கூறி குஜராத்தி மிட் டே செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததையும், அச்செய்தியில் இதே படத்தை பயன்படுத்தியிருப்பதையும் காண முடிந்தது. இச்செய்தியானது டிசம்பர் 16, 2022 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் மேலும் சில ஊடகங்களும் இதே படம் மற்றும் இதே பகுதியில் எடுக்கப்பட்ட வேறு படங்களை பயன்படுத்தி செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
மேலும் PIB Factcheck டிவிட்டர் பக்கத்திலும் வைரலாகும் இப்படம் டெல்லியில் எடுக்கப்பட்டதல்ல, அது மும்பையில் எடுக்கப்பட்டது என்று தெளிவு செய்து டிவீட் செய்திருப்பதை நம்மால் காண முடிந்தது.
Also Read: உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை ‘நிர்வாண போராட்டம்’ செய்வேன் என்றாரா அர்ஜூன் சம்பத்?
Conclusion
ஜி20 மாநாடு காரணமாக டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததாக கூறி பரப்பப்படும் படம் உண்மையில் சென்ற ஆண்டு மும்பையில் எடுக்கப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: MIssing Context
Our Sources
Gujarati Mid-day report, December 16, 2022
Tweet, PIB Fact Check, September 05, 2023
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்திலும் பிரசுரமாகியுள்ளது.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)