Authors
Claim: ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் உங்களால் இந்தியாவில் வாழ முடியும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன சங்கி தோற்றுப் போய் அழுது புலம்பிய போது.
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
தேர்தலில் தோல்வியுற்றதால் கதறி அழுத பாஜக அமராவதி வேட்பாளரும், கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்பட நடிகையுமான நவ்நீத் ராணா என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
”கருணாஸ் பட கதாநாயகி..ஜெய் ஸ்ரீ ராம் சொன்னால்தான் உங்களால் இந்தியாவில் வாழ முடியும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் சொன்ன சங்கி தோற்றுப் போய் அழுது புலம்பிய போது” என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நாதக-5, பாஜக கூட்டணி-0; வைரலாகும் புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு உண்மையானதா?
Fact Check/Verification
தேர்தலில் தோல்வியுற்றதால் கதறி அழுத பாஜக அமராவதி வேட்பாளரும், கருணாஸின் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ திரைப்பட நடிகையுமான நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த மே 05, 2022 அன்று ”India Today” வின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
அதில், “முன்னாள் அமராவதி எம்பியான நவ்நீத் ராணா,மும்பை லீலாவதி மருத்துவமனையில் 12 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு தனது கணவரும் எம்எல்ஏவுமான ரவி ராணாவைக் கண்டவுடன் உடைந்து அழுதார். “ என்று இச்செய்தி இடம்பெற்றுள்ளது.
ABP Live மற்றும் Zee 24 Taas ஆகியோரும் இந்த வீடியோ மற்றும் அது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பிட்ட வீடியோவே தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அவர் கதறி அழுததாகப் பரவி வருகிறது.
Conclusion
தேர்தலில் தோல்வியுற்றதால் கதறி அழுத பாஜக அமராவதி வேட்பாளர் நவ்நீத் ராணா என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Source
Video by India Today, dated May 5, 2022
Video by CNN-News18,dated May 5, 2022
Video by ABP Live, dated May 5, 2022
Video by Zee 24 Taas, dated May 5, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)