Claim: நேருவின் தந்தைக்கு ஐந்து மனைவிகள்
Fact: வைரலாகும் குடும்ப உறுப்பினர்கள் தகவல் தவறாக பரப்பப்படுகிறது.
நேருவின் தந்தை மோதிலால் நேருவிற்கு ஐந்து மனைவிகள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பிரியங்கா எங்க பரம்பரையைப் பற்றி மோடிக்கு என்ன தெரியும்ன்னு கேட்கப்போக வாட்ஸப், F.B எல்லாம் நாறுது” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமாயணம் திரைப்படத்தில் நடித்து வருவதால் நடிகை சாய்பல்லவி அசைவ உணவு உண்பதில்லையா?
Fact Check/Verification
நேருவின் தந்தை மோதிலால் நேருவிற்கு ஐந்து மனைவிகள் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் ஜவஹர்லால் நேரு குடும்பத்தினர் குறித்து தேடியபோது இந்திய அரசு கலாச்சார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட Nehru Portal என்கிற அதிகாரப்பூர்வ பக்கத்தில் முழுமையான குடும்ப உறுப்பினர்களின் பட்டியல் காணக்கிடைத்தது.

அதில், மோதிலால் நேருவிற்கு ஸ்வரூப் ராணி என்கிற மனைவி மட்டுமே என்கிற தகவல் தெளிவாக பதிவிடப்பட்டுள்ளது. இவர்களுடைய பிள்ளைகள் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணா என்றும் பதிவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசினால் தன்னாட்சி அமைப்பாக நடத்தப்படும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் கீழ் செயல்படுகிறது இந்த Nehru Portal என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: இந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இஸ்லாமியரை இந்து பெண்கள் அடித்து நொறுக்கினரா?
Conclusion
நேருவின் தந்தை மோதிலால் நேருவிற்கு ஐந்து மனைவிகள் என்று பரவும் புகைப்படத்தகவல் போலியாக சித்தரிக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
nehruportal.nic.in
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)