Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: நிதிஷ் குமாருக்கு கன்னத்தில் ஒரு அறை விழுந்து விட்டது
Fact: வைரலாகும் வீடியோ நிகழ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றதாகும்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” நேற்று … மோடிக்கு வாரணாசியில் செருப்படி இன்று… பல்டி பாபு நித்திஷ் குமாருக்கு கன்னத்தில் ஒரு அறை விழுந்து விட்டது மாற்றம் வேகமாதான் நடக்குது” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
Fact Check/Verification
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த நிகழ்வு தற்போதையது அல்ல; கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கடந்த மார்ச் 2022ல் ஊடகங்களில் வெளியான செய்தியின்படி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது அவரை இளைஞர் ஒருவர் தாக்கியதாக செய்தி இடம்பெற்றிருந்தது.
குறிப்பிட்ட வீடியோவே தற்போது நடைபெற்ற நிகழ்வு என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Also Read: பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report from, News 18, Dated March 28, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.