Friday, December 19, 2025

Fact Check

அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து சீர்வரிசை என்று பரவும் நொய்டா வீடியோ!

banner_image

Claim: அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு சீதாவின் தாய் வீடான நேபாளத்தில் இருந்து சீர்
Fact: வைரலாகும் வீடியோ நொய்டாவில் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் கதாகாலட்சேபம் நடைபெற்றபோது எடுக்கப்பட்டதாகும்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து வரும் சீர்வரிசை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”அயோத்தியில் நடக்கும் ஸ்ரீ ராமர் சீதா கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு சீதா பிராட்டி அவர்களுக்கு தாய் வீடான நேபாளத்தில் அதாவது பீகார் பார்டர் ஜனக்புரி பூரிதாமில் இருந்து தாய் வீட்டு சீர்வரிசை. ஜெய் ஶ்ரீ ராம்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

அயோத்தி
Screenshot from X @Jayaram9942Blr

Archived Link

Screenshot from X @RSS91978


Archived Link

Screenshot from X TK_TUTICORIN

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே பற்றி எரியும் உபி ரயில் நிலையம் எனப்பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து வரும் சீர்வரிசை என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை 2023 முதலே இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை நம்மால் அறிய முடிந்தது.

அதைத்தொடர்ந்து கீ-ப்ரேம்கள் மூலமாகத் தேடியபோது, ”Divine court of Bageshwar Dham government in Greater Noida from today, roads become saffron” என்று கடந்த ஜூலை 10, 2023 அன்று நவபாரத் டைம்ஸ் வெளியிட்டிருந்த புகைப்பட கட்டுரை நமக்குக் கிடைத்தது. அதில், குறிப்பிட்ட வைரல் வீடியோவின் காட்சிகள் புகைப்படங்களாக இடம்பெற்றிருந்தன.

அதில், ஜூலை 2023ல் நடைபெற்ற பாகேஸ்வர் தம் சர்க்கார் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரியின் ஹனுமன் கதா காலட்சேபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலசம் சுமந்து வந்த காட்சி இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ”Bageshwar Dham Sarkar” என்னும் தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி மடத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 2023ல் இடம்பெற்றிருக்கும் வீடியோவில் “Jaitpur Greater Noida Shobha Yatra and Kalash Yatra” என்கிற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள காட்சியில் வைரல் வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளது.

எனவே, அயோத்திக்கு நேபாளில் இருந்து வரும் சீர் என்று பரவும் வீடியோ நொய்டாவில் எடுக்கப்பட்டது என்பது இதன்மூலமாக நமக்கு உறுதியாகிறது.

Also Read: அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி BHEL நிறுவனம் மணிகளை தயாரித்து அனுப்பியுள்ளதா?

Conclusion

அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து வரும் சீர்வரிசை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from Navabharat times, Dated July 10, 2023 YouTube Video From, Bageshwar Dham Sarkar


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage