Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஈரான் அதிபர் அந்த கடைசி நிமிடங்கள்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்து நிகழ்வாகும்.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
”ஈரான் அதிபர் அந்த கடைசி நிமிடங்கள்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணியின் மும்பை பொதுக்கூட்டத்தின் வீடியோவா இது?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று வைரலாகும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஜார்ஜியா ஹெலிகாப்டர் விபத்து வீடியோ என்பதை நம்மால் அறிய முடிந்தது.
கஜகஸ்தான் செய்தி நிறுவனமான 24KZ கடந்த ஜூலை 30, 2022 அன்று “Day of mourning due to helicopter crash declared in Georgia” என்று வீடியோ ஒன்றைத் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வைரலாகும் வீடியோ காட்சி 0.21 நொடிகளில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூலை 29, 2022 அன்று ஜார்ஜியாவின் Gudauri மலைப்பகுதியில் பாராகிளைடிங் செய்யச்சென்ற சுற்றுலாப்பயணிகளை மீட்கச்சென்ற ஹெலிகாப்டரும் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பாரகிளைடிங் செய்யச்சென்ற சுற்றுலாப்பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான செய்தி, ஜார்ஜியாவின் உள்ளூர் செய்தி ஊடகமான Agenda.ge விலும் வெளியாகியுள்ளது. Newsflare, Gerogiatoday உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்செய்தி வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட வீடியோவே தற்போது ஈரான் அதிபரின் விபத்து வீடியோ என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Also Read: கண்ணூர் விமான நிலையத்தில் பவர்பேங்க் வெடித்ததா?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற விபத்தின் காட்சி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video from, 24Kz, Dated July 30, 2022
News Report From, newsflare
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)