Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பிரதமர் மோடி, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படம் என்று புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, 2011 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஊழல் குற்றங்களுக்கு எதிராக லோக்பால் மசோதாவை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டவர்.
தற்போது, விவசாயிகளுக்காக அவர்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் கடைசி கட்டப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படம் என்று வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
மேலும், அன்னா ஹசாரே உண்மையில் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர். அவர் பாஜகவுடன் இணைந்தே லோக்பால் மசோதா நாடகத்தை நடத்தினார். கூடவே, குறிப்பிட்ட புகைப்படத்தில் பிரதமர் மோடியுடன் அவர் இருப்பதே அதற்கு சாட்சி என்பதாக இப்புகைப்படம் குறித்து செய்திகளும் வைரலாகி வருகின்றன.
RSS planted Anna Hazare who is here with modi. Modia used lies against honest MMS.
The foundation on which Modi became PM was CORRUPT.

Originally tweeted by Harkanwal Singh (@Harkanwal911) on November 2, 2020.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருப்பது போன்று பரவும் அக்குறிப்பிட்ட புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்ற நிலையில், அப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்தோம்.
குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆராய்ந்தபோது, அப்புகைப்படத்தில் பிரதமர் மோடியுடன் இருப்பவர் மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரான லக்ஷ்மன்ராவ் இனம்தர் என்பது நமக்குத் தெரிய வந்தது. இதனைச் சில முன்னணி ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.

லக்ஷ்மன்ராவ் இனம்தர், பிரதமர் மோடிக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்று புகழப்படுபவர். குறிப்பிட்ட புகைப்படத்தில் இருப்பவர் லக்ஷ்மன்ராவ் இனம்தர் என்பதை பல செய்திகளும் உறுதி செய்துள்ளன.
பிரதமர் மோடி, அன்னா ஹசாரேவுடன் இருக்கும் புகைப்படம் என்று பரவும் புகைப்படச் செய்தி முற்றிலும் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)