Fact Check
பிரதமர் மோடியிடமிருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசு தரப்படுவதாக பரவும் ஏமாற்று செய்தி!
Claim
பிரதமர் மோடியிடமிருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசு தரப்படுவதாக பரவும் வீடியோ.

சமூக ஊடகங்களில் வந்த இப்பதிவை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
Also Read: மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களுக்கு தேர்தல் வரை தடை கோரினாரா சி.வி.சண்முகம்?
Fact
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடியிடமிருந்து ஒவ்வொரு இந்தியருக்கும் ₹699 பரிசு தரவிருப்பதாக கூறி வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக வைரலாகும் வீடியோவின் கீழ் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்தபோது “https://rewardss-gift-offer.live/tamil/” என்கிற இணைய பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்றது.
பொதுவாக ஒன்றிய அரசு இணைய பக்கம் என்றால் gov.in என்றே இருக்கும். ஆனால் இது அதுபோல இல்லை.
ஆகவே அந்த இணைய பக்கம் குறித்து Scam Detector இணையத்தளம் வாயிலாக ஆராய்ந்தோம். Scam Detector இணையத்தளம் வைரலாகும் வீடியோவில் கொடுக்கப்பட்ட இணைய பக்கம் மிகவும் ஆபத்தானது என்றும், பாதுக்காப்பற்றது என்றும் தெரிவித்தது.

இருப்பினும் அப்பக்கத்தில் இருந்த ஸ்க்ராட்ச் கார்டை தேய்த்து, அப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கீழே இருந்த பொத்தானை தட்டியதில் ‘Receiving Payment using’ என்கிற பாப் அப் ஃபோன்பே மற்றும் பேடிஎம் லோகோவுடன் வந்தது.
இதனையடுத்து அவைகளை கிளிக் செய்ய முயற்சித்தோம். அதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. அப்பக்கம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை.

இதன்படி பார்க்கையில் இது முற்றிலும் ஒரு ஏமாற்று வேலை என உறுதியானது.
(கவனிக்க: மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை நாங்கள் பாதுகாப்பான கம்ப்யூட்டர் வழியாக செய்தோம். ஒருவேளை இதை மொபைல் ஃபோன் மூலம் செய்தால், உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்படவோ, உங்கள் தகவல் அல்லது பணம் திருடப்படவோ வாய்ப்புள்ளது.)
வைரலாகும் இதே தகவல் மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பரவியதை தொடர்ந்து நியூஸ்செக்கர் மராத்தி மற்றும் நியூஸ்செக்கர் மலையாளத்தில் இதுக்குறித்து ஆராய்ந்து இத்தகவல் பொய்யானது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Sources
Scam Detector Website