Sunday, December 21, 2025

Fact Check

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நேரில் பாரத் ரத்னா வழங்கிய குடியரசுத்தலைவருக்கு இருக்கை வழங்கப்படவில்லையா?

Written By Vasudha Beri, Translated By Vijayalakshmi Balasubramaniyan, Edited By Pankaj Menon
Apr 1, 2024
banner_image

Claim: ஜனாதிபதி நிற்கும் போது பிரதமர் அமர்ந்திருக்க கூடாது. ஜனாதிபதி பழங்குடியினர் என்பதால் அவருக்கு இருக்கை அளிக்கப்படவில்லை.

Fact: வைரலாகும் புகைப்படத்தகவல் தவறானதாகும். அவர் பாரத ரத்னா விருதினை அளிக்கவே எழுந்து நின்றிருந்தார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு பிரதமர் நரேந்திர மோடியும், அத்வானியும் அமர்ந்திருந்த நிலையில் உட்காரவைக்கப்படாமல் நிற்கவைக்கப்பட்டதாகப் புகைப்படச்செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

” ஜனாதிபதி நிற்கும் போது பிரதமர் அமர்ந்திருக்க கூடாது.. ஜனாதிபதி பழங்குடியினர் என்பதால் “பார்ப்பான் மோடி” இப்படி நடந்துக்குரான்” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு
Screenshot from X @Mark2Kali_

X Link/Archived Link

Screenshot from X @Surya_BornToWin

X Link/Archived Link

Screenshot from X @thechanakkiyan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்றாரா இயக்குநர் தங்கர்பச்சான்?

Fact Check/Verification

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு  ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது The hindu Business Line மார்ச் 31, 2024 அன்று வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்று நமக்குக் கிடைத்தது.  அதில், வைரலாகும் புகைப்படத்துடன் “President Droupadi Murmu on Sunday conferred Bharat Ratna, the country’s highest civilian honour, on Bharatiya Janata Party stalwart and former Deputy Prime Minister L K Advani at his residence here.” என்று வெளியாகியிருந்தது.

அக்கட்டுரையில், இந்த சந்திப்பு தொடர்பாக ராஷ்ட்ரபதிபவன் வெளியிட்டிருந்த சமூக வலைத்தளப்பதிவும் இடம்பெற்றிருந்தது. அதில், “President Droupadi Murmu presented Bharat Ratna to Shri L. K. Advani at his residence. The formal ceremony was attended by Vice President Shri Jagdeep Dhankhar, Prime Minister Shri Narendra Modi, Defence Minister Shri Rajnath Singh, Home Minister Shri Amit Shah and the family members of Shri Advani” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில், அத்வானிக்கு பாரத ரத்னா விருதினை அளிக்கும்போது எழுந்து நிற்கும் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, அதற்கு முன்னரும் அதன்பிறகும் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், பிரதமர் நரேந்திரமோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வீடியோவிலும் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அமர்ந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

 Also Read: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அவரது வீட்டிற்கு சென்று நேரில் பாரத் ரத்னா விருதினை வழங்கிய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு  ஆசனம் அளிக்கப்படாமல் நிற்க வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
X Post From, rashtrapatibhvn, Dated March 31, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage