Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நகைகளின் எடை குறைந்திருந்த விவகாரம் குறித்த தவறான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சார்த்தப்படும் நகைகள் அர்ச்சகர்களின் பொறுப்பில் இருக்கும் நிலையில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு நகை மதிப்பீடு செய்யும் பணி கடந்த ஆண்டு நடைபெற்றது.
இந்நிலையில், நகைகளின் எடை குறைவு விவகாரத்தில் அர்ச்சகர்களிடமிருந்து 5000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரையில் மட்டும் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ‘இதுதான் மனுதர்மம் பாப்பான் தவறு செய்தால் மட்டும் தண்டனை இப்படித்தான் இருக்கும்’ என்கிற வாசகத்துடன் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
@BJP4TamilNadu @HRajaBJP
#திருட்டுபார்ப்பனகூட்டம்
Originally tweeted by Magizh Amudhan (@Amuthan1015) on November 3, 2020.
சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் இதனை ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முதலாவதாக அப்புகைப்படத்தில் நியூஸ் 18 செய்தி இடம்பெற்றிருந்தது. அது குறித்து வலைத்தளங்களில் தெளிவாக ஆராய்ந்தோம்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உற்சவ காலங்களில் பர்வதவர்த்தினி அம்மனுக்கு கோயில் நிர்வாகம் சார்பாக நகைகள் சார்த்தப்படுவது வழக்கம்.
இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் கோயில் அர்ச்சகர்கள் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நகைகளின் எடை அளவு, நகை மதிப்பீட்டாளர்கள் மூலமாக கணக்கெடுக்கும் பணி கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
இதில், அம்மனுக்கு சார்த்தப்படும் நகைகளின் எடைகள் குறைவாக உள்ளதாக தெரிய வந்ததும், அதற்காக 30 அர்ச்சகர்களுக்கு அபராத தொகை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நியூஸ் 18 செய்தி வெளியிட்டுள்ளது. அதிலேயே, இதற்கான அபராதம் 5000 ரூபாய் முதல் 10 லட்சம் வரையில் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 3ம் தேதி வெளியான செய்தியாகும்.
மேலும், நியூஸ் 18 தொடர்ந்து நவம்பர் 5ம் தேதியன்று வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், ராமேஸ்வரம் கோயிலில் தேய்மானம் காரணமாகவே நகைகள் எடை குறைந்துள்ளதாகவும், முறைகேடுகள் எதும் நடக்கவில்லை என கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளதையும் தெரிவித்துள்ளது. இதே செய்தியை தினமலர் நாளிதழும் வெளியிட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற்ற மதிப்பீட்டில் மொத்த 215 நகைகளில் தேய்மானம் காரணமாக சிலவற்றில் எடைகுறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு தேய்மானத்தில் அடிப்படையில் ரூ. 10 லட்சத்து 93,340 எனவும் கோயில் நிர்வாகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், 40 ஆண்டுகாலம் நகைப்பாதுகாப்பு பணியில் இருந்த 47 பேரிடம் இந்த தேய்மானத்திற்கான இழப்பினை ஏன் வசூல் செய்யக்கூடாது என விளக்கம் கோரியே பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது ஒரு வழக்கமான நடைமுறை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான லிங்க்-களை இங்கே இணைத்துள்ளோம்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2646771
எனவே, சமூக வலைத்தளங்களில் பரவுவதுபோல ராமேஸ்வரம் நகைகள் எடை குறைந்த விவகாரத்தில் ரூபாய் 5000 முதல் ஒரு லட்சம் வரையில் மட்டுமே அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளதாக பரவும் தகவலில் உண்மையில்லை; நகையின் தேய்மானத்திற்கேற்ப அபராதத் தொகை ரூபாய் 5000 முதல் 10 லட்சம் வரை, நகை பாதுகாப்பு பணியிலிருந்த அனைவரிடமும் பிரித்து வசூலிக்க முடிவு செய்திருப்பதாக கோயில் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது என்பதே செய்தியில் வெளியாகியிருந்தது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் மூலமாக வாசகர்களுக்கு எடுத்துக் கூறுகிறோம்.
News 18: https://tamil.news18.com/news/tamil-nadu/notice-to-30-gurus-for-losing-weight-in-jewelry-at-rameswaram-temple-vai-2-365377.html
Dinamalar: https://www.dinamalar.com/news_detail.asp?id=2646771
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)