கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக குஜராத் பாஜக தேசிய செயலாளர் ரத்னாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ரத்னாகர் தனது டிவிட்டர் பக்கத்தில்,
“கோயம்புத்தூரிலிருந்து திருச்சூர் வரை சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 மணி நேரப்பயணம் 10 நிமிடமாக மாறியுள்ளது. இந்திய அரசின் உள்கட்டமைப்பு மேம்பாடு துறைக்கு நன்றி. ஊடகங்கள் இந்த நல்ல செய்தியை பேசாமல் போகலாம்.”
என்று பதிவிட்டிருந்தார்.
இந்த டிவீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பலரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீட்டில் தங்கத்தாலான கழிப்பறையா?
Fact Check/Verification
கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக குஜராத் பாஜக தேசிய செயலாளர் ரத்னாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
நம் தேடலில் ரத்னாகர் பதிவிட்ட தகவல் தவறானது என்பது நமக்கு தெரிய வந்தது. ரத்னாகர் பதிவிட்ட பதிவில் காணப்படும் சுரங்கப்பாதை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குதிரன் மலையில் உருவாக்கப்பட்ட குதிரன் சுரங்கப்பாதையாகும். இதுக்குறித்து இந்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில்,
“கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கப்பாதையின் ஒரு பக்கத்தை இன்று திறக்கிறோம். இது மாநிலத்தின் முதல் சுரங்கப்பாதை சாலை. இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பை மேம்படுத்தும். 1.6 கி.மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பீச்சி-வாசஹானி வனவிலங்கு சரணாலயம் வழியாக வடிவமைக்கட்டுள்ளது.”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: பாஜகவை கொச்சைப்படுத்தினால் தொழிலுக்கு பிரச்சனை கொடுப்போம் என்றாரா அண்ணாமலை?
Conclusion
கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடைய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதாக ரத்னாகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)