வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact CheckReligionFact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?

Fact Check: VIP Bags மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக விளம்பரம் வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளது
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.

மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.  அந்த வீடியோவில் இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஆண், இந்து பெண் ஒருவரின் நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்து விட்டு, அப்பெண்ணின் துப்பட்டாவை எடுத்து தலையில் போட்டு இஸ்லாமிய பெண் போன்று மாற்றுவதாக இருந்தது.

மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக பரவும் வீடியோ
Screengrab from Twitter@elangovan_HM
மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக பரவும் வீடியோ
Screengrab from Facebook/ananthanchinnaraj.ananth
மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக பரவும் வீடியோ
Screengrab from Facebook/ganesh.mahadevan.94

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?

Factcheck / Verification

மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் வைரலாகும் வீடியோவின் கடைசியில் வரும் கிளிப்பிங்கில் வரும் ஆடியோவில் VIP நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வீடியோவிலோ Sky Bags நிறுவனத்தின் சூட்கேஸ் காட்டப்பட்டது.

இது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆராய்ந்ததில் VIP Bags நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் வரும் ஆடியோவையும்,  Sky Bags விளம்பரப் படத்தில் வரும் வீடியோவையும் இணைத்து இந்த கிளிப் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

இதனையடுத்து ஆராய்ந்ததில் வைரலாகும் விளம்பரத்திற்கும் தங்கள் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று VIP Bags மற்றும் Sky Bags நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

இந்நிறுவனங்கள் தந்த மறுப்பு அறிக்கையில்,

இந்த விளம்பரமானது அதிகாரப்பூர்வமானது அல்ல, சட்டத்துக்கு புறம்பான வகையில் VIP மற்றும் Sky Bags பிராண்ட் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை உருவாக்கியவர்களுக்கும் VIP நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதுக்குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை VIP Bags மற்றும் Sky Bags நிறுவங்கள் தங்களது டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வைரலாகும் வீடியோவில் இருக்கும் மற்ற கிளிப்பிங்குகள் குறித்து ஆராய்கையில், அவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்ப்பட்ட ரீல்ஸ் வீடியோ என அறிய முடிந்தது

விஷ்ணு கே விஜயன், சுமி ராஷிக் எனும் நடிகர்கள் சுஃபியும் சுஜாதாவும் எனும் மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாதுக்கல்ல வெள்ளரித்தாவு’ என்கிற பாடலுக்கு நடித்து வீடியோ ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தனர்.

Instagram will load in the frontend.
Instagram will load in the frontend.

இந்த வீடியோவின் ஒரு பகுதியை வெட்டி, அதனுடன் VIP Bags மற்றும் Sky Bags வெளியிட்ட இருவேறு விளம்பரப்படங்களின் ஆடியோ, வீடியோவை இணைத்து வைரலாகும் வீடியோவானது உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்த வீடியோவில் நடித்த விஷ்ணு கே விஜயனை நியூஸ்செக்கர் சார்பில் தொடர்புக் கொண்டு பேசுகையில், “நாங்கள் இருவரும் சீரியலில் ஒன்றாக நடிப்பவர்கள். நாங்கள் இருவரும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை உருவாக்க நினைத்தே இதில் பணியாற்றினோம். ஆனால் இது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது. லவ் ஜிஹாத்தை ஆதரிக்கும் நோக்கில் நாங்கள் இதை உருவாக்கவில்லை” என்று கூறினார்.

Also Read: சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பரத நாட்டியம் ஆடியதாக பரவும் பொய் தகவல்!

Conclusion

மதமாற்றத்தை ஆதரிக்கும் விதமாக VIP Bags விளம்பரம் வெளியிட்டுள்ளதாக வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Video

Our Sources
Tweet, from @VIPBagsIndia, Dated April 24, 2023
Tweet, from @InSkybags, Dated April 24, 2023
Youtube Video from VIP Suitcase Centre [ Dhule ], Dated October 25, 2015
Youtube Video from Skybags TV, Dated April 15, 2022
Instagram post of the real_vishnu_ on April 21,2023
Instagram post of sumirashik_official_ on April 20,2023
Conversation with Vishnu K Vijayan


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular