Claim: சீனப் பேருந்தை குஜராத் பேருந்து என்று பதிவிட்ட பாஜக ஆதரவாளர்.
Fact: உண்மையில் இது ஒரு கேலி பதிவாகும். பாஜகவை கிண்டலடிக்க இப்பதிவானது பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவை பதிவிட்டவர் பாஜக ஆதரவாளர் அல்ல, பாஜக எதிர்ப்பாளர் ஆவார்.
சீனாவின் ஹாங்காங் நகரில் ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி இயங்கும் மாடிப்பேருந்து முதன்முதலில் புழக்கத்தில் வந்துள்ளது.
இப்பேருந்தை குஜராத் மாநில பேருந்து என்று குறிப்பிட்டு ஒருவர் பதிவிட, அப்பதிவை பலரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அவரை காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

