சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“அடப்பாவிகளா…ஏபிவிபி சங்கிகள் சிவராத்திரியன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதாக கூறி மிருகக் காட்சி சாலையைத் தாக்கினர்.இதெல்லாம் உலகில் வேறு எங்காவது நடக்குமா…சங்கி முட்டாள்கள் இயற்கைக்கு எதிரானவர்கள்.” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது சங்கிகள் தாக்குதல் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தை ஆராய்ந்தபோது அதில், “This Might Be sattire” என்று இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து, அந்த thesavalavada என்கிற அந்த பக்கத்தை ஆராய்ந்தபோது இதே போன்று பல்வேறு கேலிக்குரிய வகையில் சித்தரிக்கப்பட்ட அரசியல் செய்திகள் நமக்குக் கிடைத்தது.
மேலும், இதுகுறித்து மேலும் ஆராய்ந்தபோது ”SFI, ABVP allegedly clash at SAU mess over serving non-veg food on Maha Shivratri” என்கிற செய்தி நமக்குக் கிடைத்தது.

இதுதொடர்பாகவே, சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு வழங்கியதற்காக தாக்குதல் என்பதாக கேலியாக இந்த சமூக வலைத்தளப்பக்கம் எடிட் செய்யப்பட்ட பதிவை வெளியிட்டிருந்தது. அதனையே உண்மை என்பதாக பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
Also Read: தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தூக்கியெறிந்த மாணவி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
சிவராத்திரி அன்று புலிகளுக்கு அசைவ உணவு கொடுத்த Zoo மீது ABVP சங்கிகள் தாக்குதல் என்று பரவும் புகைப்படம் ஒரு கேலிச் செய்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post From, thesavalavada, Dated Februry 28, 2025
Report From, Deccan herald, Dated Februry 26, 2025