Claim: கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறை ஏவி மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கடந்த 2015ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும்.
சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கும்பமேளாவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” கும்பமேளாவுக்கு குளிக்கச் சென்ற சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் அவர்களை காவல்துறை ஏவி மரண அடி அடித்துள்ளது ஆளும் பாஜக அரசு.. உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சங்கராச்சாரியார் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மார்ச் 01ஆம் தேதி விசிகவை திமுகவுடன் இணைக்க உள்ளாரா திருமாவளவன்?
Fact Check/Verification
சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கும்பமேளாவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த செப்டம்பர் 23, 2015 அன்று First India News வெளியிட்டிருந்த செய்தி வீடியோ நமக்குக் கிடைத்தது. ”Lathi charge on saints in Varanasi by police” என்று இந்த வீடியோ செய்தி இடம்பெற்றிருந்தது.
இச்செய்தியில் இடம்பெற்றுள்ள காட்சிகளுடன் வைரல் வீடியோவில் உள்ள காட்சிகளும் அவிமுக்தேஸ்வரானந்த் தாக்கப்படும் காட்சிகளும் ஒத்துப்போவதை நாம் கண்டோம். கடந்த செப்டம்பர் 28, 2015 அன்றே ஃபேஸ்புக் பக்கம் ஒன்றிலும் வைரலாகும் காட்சி இடம்பெற்றிருந்ததை நம்மால் காண முடிந்தது.


கங்கை நதியில் பிள்ளையார் சிலைகளை கரைக்கும் பிரச்சினையில் காவல்துறையினர் அவிமுக்தேஸ்வரானந்த் உள்ளிட்டவர்கள் மீதும், பக்தர்கள் மீதும் தடியடி நடத்தினர் என்று இந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை, Aaj Tak, News 24 ஆகிய ஊடகங்களிலும் காணலாம். இதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள இங்கே காணுங்கள். குறிப்பிட்ட நிகழ்வில் அவிமுக்தேஸ்வரானந்த் தாக்கப்பட்ட நிகழ்வே கும்பமேளாவில் சங்கராச்சாரியார் தாக்கப்பட்டதாகப் பரவி வருகிறது.
கடந்த ஜனவரி 09, 2025 அன்று கும்பமேளாவிற்கு பக்தர்கள் புடைசூழ வருகை தந்த அவிமுக்தேஸ்வரானந்த் குறித்த செய்தி Hindustan Times ஊடகத்தில் வெளியாகியுள்ளது. இவர் உத்தரகாண்ட் ஜோஷி மடத்தின் சங்கராச்சாரியார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வின்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் உத்தரபிரதேசத்தில் ஆட்சியில் இருந்தது சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகும்.

Also Read: நடிகர் கார்த்தியிடம் சீமான் 1 கோடி கேட்டதாக பரவும் எடிட் வீடியோ!
Conclusion
சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் கும்பமேளாவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி வீடியோ கடந்த 2015 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video By, First India News, Dated September 23, 2015
Facebook Post By, 1008 Guru, Dated September 28, 2015
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)