Claim: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி
Fact: வைரலாகும் வீடியோ சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் எவ்வாறு மீட்கப்படுவார்கள் என்று செய்முறை விளக்கம் காட்டியபோது எடுக்கப்பட்டதாகும்.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
“உலகின் தலைசிறந்த சுரங்க நிபுணர் வரவழைப்பு…அமெரிக்காவில் இருந்து துளையிடும் இயந்திரம் வரவழைப்பு… தினம்தினம் முதல்வரை அழைத்து என்னாச்சு என்று விசாரிப்பு.. பிரதமர் அலுவலகம் நேரடி கண்காணிப்பு… மத்திய அமைச்சர், ராணுவப் பொறியாளர்கள் களமிறக்கம்… மீட்டு விட்டார் 41 தொழிலாளர்களையும்… #மோடிஜி எனும் ரட்சகர்….பாரதத்தின் பிதாமகன்….என்ன தவம் செய்தோமோ…தலைவனாக பெற… தந்த இறைவனுக்கும் நன்றி.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பில்கேட்ஸ் கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடையை சுத்தம் செய்தாரா ?
Fact Check/Verification
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்றே இந்த வீடியோ NDTV-யில் வெளியாகியிருந்தது. அதில், “சுரங்கப்பாதையில் மாட்டிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் இப்படித்தான் மீட்கப்படுவார்கள்” என்று இந்த வீடியோ வெளியாகியிருந்தது. இந்த வீடியோ இந்தியன் எக்ஸ்பிரஸ் யூடியூப் பக்கத்திலும் இடம்பெற்றிருந்தது.
எனவே, மீட்கப்பட்ட நிகழ்விற்கு முந்தைய வீடியோ இது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. சுரங்கத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளர்கள் எவ்வாறு மீட்கப்படுவார்கள் என்று விளக்கமளித்த போது எடுக்கப்பட்ட வீடியோவாகும் இது.
Also Read: திமுக ஆட்சியில் லஞ்சம் கேட்ட போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்ட காட்சி என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report From, NDTV, Dated November 24, 2023
Report From, The Indian Express, Dated November 24, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)