Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: சிருங்கேரி நூலகத்தில் இடம்பெற்றுள்ள 1967ஆம் ஆண்டு வரையப்பட்ட அரிதான கனகவர்ஷினி ஓவியம்
Fact: வைரலாகும் ஓவியங்கள் விஷ்ணு பிரபா மற்றும் ஜெகதீஷ் ஆகிய தற்கால ஓவியர்களால் வரையப்பட்டதாகும்.
சிருங்கேரி நூலகத்தில் இடம்பெற்றுள்ள 1967ஆம் ஆண்டு வரையப்பட்ட அரிதான கனகவர்ஷினி ஓவியம் என்று இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன.
“மிக மிக அரிதான கனகவர்ஷினி படம். சிருங்கேரி நூலகத்தில் உள்ள மிக மிக அரிதான படம். இந்த படம் 1967 ஆம் ஆண்டு, கருடன் மீது மஹாலக்ஷ்மி, மஹாவிஷ்ணு இருவரும் கனகவர்ஷினியாக, காட்சி தருகின்றார்கள். விஷ்ணுவின் புராணத்தில் உள்ள ஸ்லோகத்தின் அடிப்படையில் வரையப்பட்டது. இந்த படத்தில் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமி இருவரும் சேர்ந்து கையிலிருந்து தங்கத்தை வெளியிடுகிறார்கள். விஷ்ணு வலது கையில் சூர்யனையும், இடது கையில் சந்திரனையும் பிடித்திருக்கிறார்.” என்று இரண்டு புகைப்படங்கள் பரவுகின்றன.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கருணாநிதியை கேடுகெட்ட பிறவி என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினாரா?
சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு வரையப்பட்ட கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படங்கள் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படங்களில் முதலாவது புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த ஓவியத்தை வரைந்தவர் விஷ்ணு பிரபா என்கிற ஓவியர் என்பது நமக்கு உறுதியாகியது. அவருடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் இருந்து இப்புகைப்படத்தை எடுத்து பகிர்ந்துள்ளனர் என்பதும் உறுதியாகியது.
தொடர்ந்து, மற்றொரு புகைப்படத்தையும் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த ஓவியம் ஓவியர் ஜெகதீஷ் என்பவரால் வரையப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது. அவரது அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
உண்மையில் கனகவர்ஷினி ஓவியம் சிருங்கேரி நூலகத்தில் உள்ளதா என்பது குறித்து கேட்டுள்ளோம். விரைவில் அதற்கான விளக்கத்தை இங்கே இணைக்கிறோம். எனினும், தற்போது பரவும் இரண்டு புகைப்படங்களும் சிருங்கேரி நூலகத்தில் இடம்பெற்றுள்ள அரி்தான புகைப்படம் அல்ல; தற்போதைய காலகட்ட ஓவியர்களால் வரையப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
Also Read: கேரளாவில் இந்து கோயிலை முஸ்லீம்கள் அடித்து நொறுக்கியதாக பரவும் தவறான வீடியோ!
சிருங்கேரி நூலகத்தில் உள்ள 1967ஆம் ஆண்டு வரையப்பட்ட கனகவர்ஷினி ஓவியம் என்று பரவும் புகைப்படங்கள் தற்போதைய காலகட்டத்தில் வரையப்பட்டவை என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from Anubhava Media Network, Dated July 13, 2018
Instagram post from, Vishnuprabha Numburi Chandraraja
Conversation with Vishnuprabha
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)