Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: ஸ்ட்ராபெரி நிற பொம்மை மிட்டாய் வடிவில் பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை
Fact: வைரலாகும் தகவல் பல காலமாகவே பரவி வருகின்ற ஒரு வதந்தியாகும்.
ஸ்ட்ராபெரி நிற பொம்மை மிட்டாய் வடிவில் பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”ஸ்ட்ராபெர்ரி குயிக்” எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள் பள்ளிகளில் தற்போது மிகவும் பயங்கரமான போதை வியாபாரம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது,” என்பதாக இந்த புகைப்படத்தகவல் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பை வெளியிட்டதா புதிய தலைமுறை?
ஸ்ட்ராபெரி நிற பொம்மை மிட்டாய் வடிவில் பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஏப்ரல் 11, 2017ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க ஊடகமான “George Herald” வெளியிட்டிருந்த “Watch out for teddy bear drugs” என்கிற செய்தியில் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் தெற்கு பகுதியில் இந்த வடிவிலான போதைப்பொருட்கள் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, நம் தேடலில் மே 2017ல் The Straits Times ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் மிட்டாய் போன்ற போதைப்பொருள் என்று பரவும் தகவல்கள் எதையும் சிங்கப்பூர் மத்திய போதைத்தடுப்பு பிரிவு வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ப்ளோரிடாவில் இவை புழக்கத்தில் இருந்ததாகவும் இந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 24, 2010ல் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்திக்கட்டுரையில் மெத் என்று அழைக்கப்படும் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் ஸ்ட்ராபெரி சுவையுடன் “Strawberry Quick” என்கிற பெயரில் மும்பையில் பள்ளிக் குழந்தைகளிடம் விற்கப்படுவதாகவும், அதை குழந்தைகள் சாப்பிட்டு அதற்கு அடிமையாகி விடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியே சமூக வலைத்தளத்தில் சிறு மாறுதல்களுடன் பரவி வருகிறது.
குறிப்பிட்ட செய்தியில் எந்த புகைப்படமும் இடம்பெற்றிருக்கவில்லை. கடந்த 2007 ஆம் ஆண்டே இதுகுறித்த உண்மைச்சோதனையை Snoops வெளியிட்டிருந்தாலும், 2010ஆம் ஆண்டு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக செய்தி வெளியாகியிருந்தாலும், 2017ஆம் ஆண்டு முதலே இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தாலும் தற்போது நடைபெறுவதாக எந்தவித செய்திகளும் இல்லை. இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு வதந்தி என்பது இதன்மூலமாக உறுதியாகிறது.
Also Read: திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்திற்கு பட்டை மற்றும் நாமம் போட்டு வந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதா?
ஸ்ட்ராபெரி நிற பொம்மை மிட்டாய் வடிவில் பள்ளிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனை என்று பரவும் செய்தி ஒரு வதந்தி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
The Straight Times, May 09, 2017
Times Of India, October 24, 2010
George Herald, April 11, 2017
Snopes report, April 29, 2007
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)