Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: கைது செய்யப்படும்போது ‘அண்ணாமலை ஒழிக’ என்று கோஷமிட்டார் தமிழிசை சௌந்திராஜன்.
Fact: இத்தகவல் தவறானதாகும். தமிழிசை ‘அடக்குமுறை ஒழிக’ என்றே கோஷமிட்டார்; ‘அண்ணாமலை ஒழிக’ என்று அல்ல.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக புகார் எழுந்த நிலையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளன.
நேற்று தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தமிழிசை சௌந்திராஜன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் அவரை கைது செய்தனர். இக்கைது சம்பவத்தின்போது அண்ணாமலை ஒழிக என்று தமிழிசை கோஷமிட்டதாக தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது பலருக்கு உடன்பாடில்லை என்றாரா திருச்சி சிவா?
Fact Check/Verification
‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை சௌந்திராஜன் கோஷமிட்டதாக வீடியோத்தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
இந்த ஆய்வில் IBC தமிழ் யூடியூப் பக்கத்தில் தமிழிசையின் கைது குறித்த வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அந்த வீடியோவின் 5:03 நேரத்தில், ‘அடக்கு முறை ஒழிக’, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத அரசு ஒழிக’ என்று தமிழிசை கோஷமிடுவதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்த வீடியோவிலும் ‘அடக்குமுறை ஒழிக’ என்று தமிழிசை கோஷமிடுவதை காண முடிந்தது.
மேலும் சில யூடியூப் பக்கங்களில் இச்சம்பவம் தொடர்பான் வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றிலும் அடக்குமுறை ஒழிக’ என்றே தமிழிசை கோஷமிட்டிருந்தார். அவ்வீடியோக்களை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் தமிழிசை அண்ணாமலை ஒழிக என்று கோஷமிட்டதாக பரப்பப்படும் தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது.
Also Read: மண்டபத்தில் செட் போட்டு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியதாக பொய்யுரைத்தாரா ஸ்டாலின்?
Conclusion
‘அண்ணாமலை ஒழிக’ என்று தமிழிசை சௌந்திராஜன் கோஷமிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அவர் அடக்குமுறை ஒழிக என்றே கோஷமிட்டார். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Youtube video from IBC Tamil, Dated December 27, 2024
Youtube video from Polimer News, Dated December 27, 2024
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.