ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkமதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வைரலான போஸ்டர் பிழைகள் திமுகவினரால் போட்டோஷாப் செய்யப்பட்டதா?

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வைரலான போஸ்டர் பிழைகள் திமுகவினரால் போட்டோஷாப் செய்யப்பட்டதா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

மதுக்கடைகள் திறக்கப்படுவது குறித்து தமிழக அரசுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கையில் போஸ்டருடன் போராட்டம் நடத்தியதாக வெளியான புகைப்படம் வைரலாகிய நிலையில், அதில் எழுத்துப்பிழைகள் அதிகமாக இருந்தன. இந்நிலையில், திமுகவினர் திட்டமிட்டு இதனைப் போட்டோஷாப் செய்துள்ளதாக மற்றொரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

Source: Facebook

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறையத் துவங்கியதைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, திமுக தலைமையிலான மாநில அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்தும், மக்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்து வருகின்றன.

இதற்காக, ஜூன் 13 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை (நேற்று) பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவைச் சேர்ந்த மல்லிகா என்பவர் கைகளில் “தமிழக அரசே மது கடையை திறக்தே மக்களை கொல்தே கொரோனவுக்கு துணை போதே. ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை தலைவர் S.V.மல்லிகா. P.J.B 13.6.2021 ஞாயறு” என்று எழுத்துப்பிழைகள் அதிகளவில் காணப்படும் அளவிலான போஸ்டருடன் காணப்பட்டார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படத்தில் தவறாக இடம்பெற்றுள்ள பிழைகள் அடங்கிய போஸ்டர் திமுகவினரால் போட்டோஷாப் செய்யப்பட்டது எனவும், உண்மையான புகைப்படம் இதுதான் எனவும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

மதுக்கடைகள்
Source: Facebook

Facebook Link

மதுக்கடைகள்
Source:Facebook

Facebook Link

மதுக்கடைகள்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/Verification:

மதுக்கடைகள் எதையும் திறக்காதே தமிழக அரசே என்று பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் போஸ்டருடன் போராட்டம் நடத்திய புகைப்படத்தில் போஸ்டரில் அமைந்துள்ள எழுத்துப்பிழையுடன் கூடிய வாசகங்கள் போட்டோஷாப் செய்து உருவாக்கப்பட்டது என்று பரவும் தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து ஆராய்ந்தோம்.

முதலில், குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படத்தில் எழுத்துப்பிழைகளுடன் இடம் பெற்றிருந்த வாசகங்கள் உண்மை என்பது நமக்குத் தெரிய வந்தது. பாஜகவின் டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த பாஜகவினரில் மல்லிகா என்பவரும் ஒருவர்.

வைரலான முதல் புகைப்படம்

அவரது புகைப்படத்தில் வைரலான புகைப்படத்தில் இருந்த போஸ்டரில் PJP என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் P என்பது மட்டும் திருத்தப்பட்டு B என்று மாற்றப்பட்ட புகைப்படம் சேலம் பாஜக சமூக வலைத்தளப்பக்கத்தில் நமக்குக் கிடைத்தது.

Source: Facebook

எனவே, முதலில் வைரலான தவறுகளுடன் கூடிய புகைப்படமும், இதுவும் உண்மையானவைதான்.

Source: Facebook

Facebook Link

மேலும், திமுகவினரால் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று பரவும் படத்தில் அவரது கைகள் நன்கு போஸ்டரில் பதிந்துள்ளன. ஆனால், உண்மையான புகைப்படம் என்று பகிரப்படும் புகைப்படத்தில் அவரது கைகளுக்கு மேலாக குறிப்பிட்ட போஸ்டர் காணப்படுகிறது.

Source: Facebook

வைரலான முதல் புகைப்படம்-இதில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள் உண்மையாக அவர்களால் எழுதப்பட்டது.

Source: Facebook

இதில் உண்மையான புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ள படத்தில் உள்ள வாசகங்கள் அடங்கிய போஸ்டரே போட்டோஷாப் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.

எனவே, உண்மையான புகைப்படம் என்று பகிரப்படும் படமே போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது நமக்குத் தெளிவாகிறது.

Conclusion:

மதுக்கடைகள் எதையும் திறக்காதே தமிழக அரசே என்று பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் கையில் போஸ்டருடன் போராட்டம் நடத்திய புகைப்படத்தில் போஸ்டரில் அமைந்துள்ள எழுத்துப்பிழையுடன் கூடிய வாசகங்கள் போட்டோஷாப் செய்து உருவாக்கப்பட்டது என்று பரவிய தகவல் தவறானதாகும் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Salem BJP FB page: https://www.facebook.com/velutkyadav/photos/1465718240447376

Facebook: https://www.facebook.com/vijimini30061211/posts/3940793476016419

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular