வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkகேரளா யானை மலப்புரத்தில் இறந்ததா ? உண்மை என்ன

கேரளா யானை மலப்புரத்தில் இறந்ததா ? உண்மை என்ன

உரிமை கோரல் : 

மலப்புரம் மலம் தின்னும் புரமா…?

பசியுடன் வந்த கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற கொடூரம்..!

இஸ்லாமியர் 70 சதவிகிதம் உள்ள

கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் மன்னார்கட் வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு கர்ப்பமடைந்திருந்த யானை ஒன்று கடந்த மே மாத இறுதியில் வந்துள்ளது. பசியில் அலைந்து திரிந்த யானைக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர், சிறிதும் இரக்கமின்றி அன்னாசிப் பழத்திற்குள் வெடிமருந்தை வைத்து கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் யானையின் மரணம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வனஉயிர்ப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்பு :

சரிபார்ப்பு :

கேரளாவில் கர்ப்பமாய் இருந்த யானை பசியால் உணவுத் தேடி வந்த வெடிமருந்து வைக்கப்பட்ட அண்ணாச்சி பழத்தினை உண்டு காயமடைந்து இறந்த சம்பவம் இந்திய அளவில் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் பெற்று வருகிறது.


கேரளாவில் 70 சதவீதம் முஸ்லீம் மக்கள் வசிக்கும் மலப்புரத்தில் சிலர் யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்தினை வைத்துக் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இதேபோல், பாகிஸ்தானி-கனேடியன் எழுத்தாளர் தாரிக் ஃபாட்டா என்பவர் NDTV செய்தியுடன் யானை வெடிமருந்து கொடுத்துக் கொன்ற மலப்புர மாவட்டத்தில் 70 சதவீத முஸ்லீம் மக்கள் வசிப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தகவலிலும் மலப்புரம் என்றே இடம்பெற்று உள்ளது.

இதன் உண்மைத் தன்மையை  நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம் .

உண்மை தன்மை :

NDTV செய்தியில் முதலில் யானை குறித்த செய்தியில் மலப்புரம் மற்றும் யானைக்கு வெடிமருந்து வைத்து அண்ணாச்சி பழத்தினை யாரோ கொடுத்ததாக வெளியிட்டு பின்னர் பாலக்காடு பகுதி என்றும், யானை பழத்தை உண்டதாக ஜூன் 3-ம் தேதி அப்டேட் செய்துள்ளனர்.

https://www.ndtv.com/india-news/pregnant-elephant-ate-pineapple-stuffed-with-crackers-in-kerala-she-died-standing-in-river-2239497

https://www.ndtv.com/india-news/pregnant-elephant-ate-pineapple-stuffed-with-crackers-in-kerala-she-died-standing-in-river-2239497

மேலும், இந்த செய்தியை எழுதிய ஷைலஜா வர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், கேரளா யானை செய்தியில் முதலில் மாவட்டத்தின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், அது தெரிய வந்த பிறகு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

ndtv  தனதுக்  கட்டுரையில்  சம்பவம் நிகழ்ந்தது பாலக்காடு உள்ளிட்ட விவரங்களை மாற்றிய பிறகு Postcard எனும் முகநூல் பக்கத்தில் இரண்டு ஸ்க்ரீன்ஷார்ட்களை வட்டமிட்டுக் காண்பித்து உள்ளனர்.கேரள முதல்வர் பினராயி விஜயன் உடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சம்பவம் நிகழ்ந்தது பாலக்காடு மாவட்டம் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

உணவைத் தேடி வந்த கர்ப்பமாய் இருந்த யானை பசியால் அங்கு இருந்த வெடிமருந்து வைக்கப்பட்ட பழத்தினை உண்டது. இதனால் யானையின் வாய், நாக்கு பகுதிகள் பலத்த காயமடைந்து, பசி கொடுமையுடன் வலியும் சேர்ந்ததால் அங்கிருந்த வெள்ளையாறு ஆற்றுக்குள் இறங்கி நின்று அதிக அளவில் தண்ணீரைக் குடித்து உள்ளது. மூன்று நாட்களாகத் தண்ணீரில் நின்ற யானையைக் கும்கி யானைகளைக் கொண்டு மீட்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் அந்த யானை இறந்து விட்டது. உடற்கூராய்வில் யானை கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.யானை பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அம்பலப்பரா பகுதியில் மே 23-ம் தேதி சுற்றித் திரிந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். மே 27-ம் தேதி யானை வெள்ளையாறு ஆற்றில் இறந்த பிறகு மீட்கப்பட்டது.

https://indianexpress.com/article/india/kerala-pregnant-elephant-could-have-eaten-explosives-meant-to-kill-boars-say-officials-6441480/

விசாரணைக்குப் பிறகு பயிர் நிலங்களில் காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்குப் போடப்பட்ட வலையில் யானை பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். வன எல்லையில் பன்றிகள் மற்றும் பிற காட்டு விலங்குகளைச் சிக்க வைக்கவும், கொல்லவும் பழங்கள், கறி உள்ளிட்டவையில் பட்டாசுகள் மற்றும் நாட்டுக் குண்டுகளை வைத்துப் பயன்படுத்துவதாகத் தகவல் கிடைத்துள்ளன. யானை தற்செயலாக அதைச் சாப்பிட்டு இருக்கலாம் என வனத்துறை அதிகாரி தரப்பில் கூறப்பட்டது.

முடிவுரை :

 எங்களின்  ஆராய்ச்சிக்குப்  பின்னர் யானை இறந்த சம்பவம் நிகழ்ந்தது மல்லபுரத்தில் அல்ல என்பது தெரியவந்து உள்ளது .இறந்த யானையை வைத்து ஒரு  குறிப்பிட்ட மதத்தவரின் மீது வெறுப்பு உணர்வு உருவாக்கப்பட்டு வருகிறது .கர்பமாக இருந்த யானை இறந்த சம்பவம் வேதனைக்குரியது .ஒரு இறப்பை வைத்து இது போன்ற மத வெறுப்பினை உண்டாக்குவது மீகவும் வேதனை அளிப்பதாக உள்ளது .

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • News Channel 

Result: False 

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular