Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
வாசன் ஐ கேர் உரிமையாளர் அருண் அவர்கள் தற்கொலை செய்ததால்தான் உயிரிழந்தார் எனும் செய்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வருகிறது.
வாசன் ஐ கேர் நிறுவனத்தின் உரிமையாளரான அருண் அவர்கள் கடந்த திங்கட்கிழமை (16/11/2020) அன்று மரணமடைந்தார்.
இந்நிலையில் அவர் தற்கொலை செய்துக் கொண்டதாகவும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி அவர்களும்,
“வாசன் ஐ கேர்’ குழுமத்தின் தலைவர் அவர்களின் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கிறனர். தமிழக அரசு உடன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.”
என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவி வரும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இச்செய்தியை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
வாசன் ஐ கேர் உரிமையாளர் அருண் அவர்கள் இறப்புக் குறித்து பரவும் செய்திகளின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இதுக்குறித்து கவனமாகத் தேடினோம்.
அவ்வாறு தேடியதில் பாலிமர் நியூஸில் வெளிவந்தச் செய்தி ஒன்று நம் கண்ணில் தென்பட்டது.
அதில், அருண் அவர்களின் மரணமானது சந்தேக மரணமென்றோ, அல்லது தற்கொலை என்றோ அருண் குடும்பத்தினர் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும், 16/11/2020 அன்றே உடற்கூறு ஆய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு முடிந்து விட்டது எனவும் சென்னைக் காவல்துறையினர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உடற்கூறு ஆய்வின் முதல்கட்ட அறிக்கையில் மரணத்திற்கு மாரடைப்பே காரணமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை காவல்துறையினரின் இந்த அறிக்கையின்படி பார்த்தால் வாசன் ஐ கேர் மருத்துவமனை முதலாளி அருண் அவர்களின் மரணம் குறித்து பரப்பப்படும் செய்திகள் யாவும் உண்மையில்லை என்று தெளிவாகிறது.
இதுவரை வந்த அறிக்கையின்படி அருண் அவர்களின் இறப்பிற்கு காரணம் மாரடைப்பே ஆகும்.
வாசன் ஐ கேர் அருண் அவர்களின் மரணமானது தற்கொலை என்று பரவும் செய்தி தவறானது என்பது நம் ஆய்வின் மூலம் தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் இச்செய்தியை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Kumutham: https://www.facebook.com/KumudamOnline/posts/4313438135346493
Top Tamil News: https://twitter.com/toptamilnews/status/1328391883257573376
Asianet News: https://twitter.com/AsianetNewsTM/status/1328317616667049984
Narayanan thirupathi: https://twitter.com/Narayanan3/status/1328542744772440064
Polimer News: https://www.youtube.com/watch?v=GsSJWw7vBhY
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)