ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeCoronavirusதனிமைப்படுத்துதல் அரங்கத்தில் லுங்கி டான்ஸ் வீடியோ எங்கு நடந்தது ?

தனிமைப்படுத்துதல் அரங்கத்தில் லுங்கி டான்ஸ் வீடியோ எங்கு நடந்தது ?

உரிமை கோரல் :

இவர்கள் நேரு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கொரானா நோயாளிகள்.

சரிபார்ப்பு :

பெரிய அரங்கத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட மக்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோ வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது. நேரு அரங்கத்தில், சென்னையில் உள்ள கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடுவதாக கிண்டல் செய்தும் பகிரப்பட்டு வருகிறது.

R

குவாரண்டைன் ஜோன்…. சென்னை ட்ரேட் செண்டர்…. டேய்… வந்துருக்குறது கொரோனா டா… இவனுங்க கரீனா னு நினைச்சிட்டானுங்க போல…. பாவம்டா அந்த கொரானா…

உண்மைத் தன்மை :

வைரலாகும் விடியோவை ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், திரிபுரா மாநிலத்தின் அகர்தலாவில் உள்ள அரசு கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்தவர்கள் லுங்கி டான்ஸ் பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருவதாக ஜூன் 10-ம் தேதி india.com எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

https://www.india.com/viral/watch-residents-in-tripura-quarantine-centre-groove-to-lungi-dance-video-goes-viral-4054118/

திரிபுராவில் உள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் மையத்தில் உள்ளவர்கள் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை சென்னையில் உள்ள அரங்கத்தில் நிகழ்ந்ததாக பரப்பி வருகிறார்கள். இதே வீடியோவை தெலங்கானா மாநிலத்தில் உள்ள காச்சிபௌலி அரங்கத்தில் நிகழ்ந்ததாகவும் தவறாக பரப்பி இருந்தனர்.

https://www.nagalandpost.com/lungi-dance-of-covid-patients-in-tripura-goes-viral/216949.html

முடிவுரை :

எங்களின் ஆராய்சிக்குப் பின்னர் கொரோனா நோயாளிகள் டான்ஸ் ஆடும் வைரல் வீடியோ  சென்னையில்  நடந்தவை அல்ல என்பது தெரியவந்து உள்ளது .கிரிக்கெட் விளையாடுவது என தங்களின் நேரத்தை செலவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் நேர்மறையான ஆதரவையும், கேலிக்கும் உள்ளாகி வருகிறது.

Sources

  • Google Search
  • Twitter 
  • Facebook
  • Newspaper

Result: False  

(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Most Popular