Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
உரிமைக்கோரால்
கன்னடச் செய்தித்தாளை வாசித்தார் ராகுல் காந்தி? உண்மையில் அவர் ஒரு அதிசயப் பிறவி.
சரிபார்ப்பு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கன்னடச் செய்தித்தாளை வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. “இந்தியைச் சரியாகப் படிக்க முடியாத ஒருவர் கன்னடத்தைப் படிப்பது போல் நடித்து வருகிறார்” இது போன்றக் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதன் உண்மைத் தன்மையை நியூஸ்செக்கரில் கண்டறியத் தொடங்கினோம் .
உண்மைத் தன்மை
எங்கள் ஆராய்ச்சியின் முதல் கட்டமாக ராகுல் காந்தியின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்கையில் இந்தப் புகைப்படம் ஜூன் 12, 2017 அன்று பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியானதைக் காணமுடிந்தது .பெங்களூரில் நடந்த “நேஷனல் ஹெரால்டின்” நினைவுப் பதிப்பை வெளியிட ராகுல் காந்தி பெங்களூரு வந்தபொழுது எடுக்கப்பட்டப் புகைப்படம் .
ஜூன் 12, 2017 நேஷனல் ஹெரால்டின் இ -செய்தித்தாளைத் தேடும் பொழுது இந்தச் செய்தித்தாளின் முதல் மற்றும் கடைசிப் பக்கம் மட்டுமே கன்னடத்தில் இருப்பதைக் கண்டறிந்தோம், ஆனால் நடுவில் உள்ள முக்கியச் செய்தித்தாள் ஆங்கிலத்தில் தான் இருந்தது. நேஷனல் ஹெரால்ட் செய்தித்தாள் ஆங்கிலம் (நேஷனல் ஹெரால்ட்), இந்தி (நாவ் ஜீவன்) மற்றும் உருது (QAUMI AWAZ) ஆகிய 3 மொழிகளில் மட்டுமே அச்சிடப்படுகிறது.
பெங்களூரில் நேஷனல் ஹெரால்டின் நினைவுப் பதிப்பில் மட்டுமே, செய்தித்தாளின் முதல் மற்றும் கடைசிப் பக்கம் கன்னடத்தில் வெளியிடப்பட்டது.
1938-இல் இந்தியாவின் முதல் பிரதமரும் அவரது தாத்தாவுமான பண்டித ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது இந்தச் செய்தித்தாள். இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தச் செய்தித்தாள் பரவலாக வாசிக்கப்பட்டது, மேலும் எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக, இச்செய்தித்தாளின் நிதி கையாளுதல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முடிவுரை
எங்களின் ஆராய்ச்சிக்குப் பின்னர் ராகுல் காந்தி வாசித்த நேஷனல் ஹெரால்டின் செய்தித்தாளில் முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள் மட்டுமே கன்னடத்தில் இருந்ததைக் கண்டறிந்தோம் மற்றும் 2017-ம் ஆண்டு வெளியானச் செய்தியை இப்பொழுது மீண்டும் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர்.
Sources
Result: FAKE
(உங்களுக்கு எந்தவொரு தகவலின் உண்மைத்தன்மையைத் தெரியவேண்டுமானால் எங்களிடம் 9999499044 என்ற வாட்ஸாப் எண்ணில் புகார் அளிக்கலாம். எங்கள் இணையதளத்தில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)