Fact Check
Karur stampede: குற்ற உணர்ச்சியற்று பேசினாரா தவெக நிர்வாகி நிர்மல்குமார்?
Claim
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் குற்ற உணர்ச்சியற்று பேசினார்.
Fact
வைரலாகும் தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோ கரூர் சம்பவத்திற்கு முந்தைய பழைய வீடியோவாகும்.
தவெக தலைவர் விஜய் நேற்றைய முன் தினம் (செப்டம்பர் 27) கரூரில் பரப்புரை செய்துக்கொண்டிருந்தபோது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக 41 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் குற்ற உணர்ச்சியற்று பேசியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றால் பாலைவனத்தில்தான் பரப்புரை நடத்த முடியும் என்று நிர்மல்குமார் பேசுவதை கேட்க முடிந்தது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கரூர் துயர சம்பவத்திற்கு பின் சிரித்துக்கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தாரா விஜய்?
Fact Check/Verification
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் குற்ற உணர்ச்சியற்று பேசியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் திருச்சியில் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி மறுத்ததாக நிர்மல்குமார் பத்திரிக்கை சந்திப்பில் பேசிய வீடியோ ஒன்று தந்தி டிவி யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 9, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தது.
அவ்வீடியோவின் 5:20 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் “மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்றால் பாலைவனத்தில்தான் பரப்புரை நடத்த முடியும்” என்று நிர்மல்குமார் பேசி இருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் ABP நாடு, புதிய தலைமுறை, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களின் யூடியூப் பக்கங்களிலும் நிர்மல்குமாரின் மேற்கண்ட பத்திரிக்கை சந்திப்பு வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவற்றிலும் ‘பாலைவனத்தில்தான் பரப்புரை நடத்த முடியும்’ என்று நிர்மல்குமார் பேசி இருந்ததை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடக்கவில்லை; கரூர் சம்பவம் நடப்பதற்கு ஏறக்குறைய 18 நாட்களுக்கு முன்பு செப்டம்பர் 9 அன்று நடந்தது என்பது தெளிவாகின்றது.
Also Read: ரசிகனிடம் பிளாக் டிக்கெட் விற்று சம்பாதித்தேன் என்று விஜய் கூறினாரா?
Conclusion
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் குற்ற உணர்ச்சியற்று பேசியதாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். வைராலாகும் வீடியோ கரூர் சம்பவத்திற்கு முந்தைய பழைய வீடியோவாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube video by Thanthi TV, dated September 9, 2025
YouTube video by ABP Nadu, dated September 9, 2025
YouTube video by Polimer News dated September 9, 2025
YouTube video by Puthiya Thalaimurai, dated September 9, 2025