Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: கோவையில் சுகாதாரமற்று பானி பூரி விற்கப்பட்டதாக பரவும் வீடியோ!
Fact: வைரலாகும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும்.
கோவை பிஎஸ்ஜி கல்லூரி அருகே சுகாதாரமற்ற முறையில் பானி பூரி விற்பனை செய்யப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆம்ஸ்ட்ராங்கிடம் வெறும் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?
கோவையில் சுகாதாரமற்று பானி பூரி விற்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
இத்தேடலில் கன்னட நடிகை சஞ்சனா கல்ரானி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோவை ஜூன் 25, 2024 அன்று பகிர்ந்திருப்பதை காண முடிந்தது. சஞ்சனா கல்ரானி பகிர்ந்திருந்த இவ்வீடியோவில் இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் தெளிவுப்படுத்தி இருப்பதையும் காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் சஞ்சனா கல்ரானி இதுபோன்று பல விழிப்புணர்வு வீடியோக்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் ஜூலை 5, 2024 அன்று சஞ்சனா பதிவிட்ட மற்றொரு வீடியோவில் வைரலாகும் வீடியோவில் பாணி பூரி விற்கும் அதே நபர் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு உண்மையானது அல்ல; அது ஒரு சித்தரிக்கப்பட்ட நிகழ்வு என தெளிவாகின்றது
Also Read: பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
கோவையில் சுகாதாரமற்று பானி பூரி விற்கப்பட்டதாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒரு புனைவு வீடியோவாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Facebook post from Actress Sanjjanaa Galrani, Dated June 25, 2024
Facebook post from Actress Sanjjanaa Galrani, Dated July 05, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)