வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் முன்னணி ஊடகங்களில் செய்தி ஒன்று வைரலாகியது.

Fact check/ Verification:
தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில், சிவகங்கை பகுதியை ஆட்சி செய்து வந்த அரசி வீரமங்கை வேலுநாச்சியார்.
இவர், கிழக்கிந்திய கம்பெனி காலூன்றி இந்தியாவை ஆட்சி புரிந்த காலத்தில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டக் களத்தில் போராடிய வீராங்கனை என்று சரித்திரம் சொல்கிறது.
இந்நிலையில், வீரமங்கை வேலுநாச்சியாரின் சுயசரிதம் திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் அதில் நடிகை நயன்தாரா வேலுநாச்சியாரின் கதாப்பாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் முன்னணி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
உண்மையும் பின்னணியும்:
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்களால் செல்லமாகக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, வீரமங்கை வேலுநாச்சியாராக நடிக்க உள்ளார் என்கிற செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய அச்செய்தி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் நயன்தாரா தரப்பில் இருந்து வெளிவந்துள்ளதா என்று ஆராய்ந்தோம்.
அத்தேடலில், நடிகை நயன்தாராவின் அதிகாரப்பூர்வ மக்கள் தொடர்பு நிறுவனமாகச் செயல்படும் DoneChannel1 தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாராவின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில், நடிகை நயன்தாரா வீரமங்கை வேலுநாச்சியாரின் பயோபிக் திரைப்படத்தில் நடிப்பதாக வெளியாகிய தகவல் முற்றிலும் தவறானது; வதந்தி என்று உறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Conclusion:
எனவே, வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று பரவிய தகவல் முற்றிலும் தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே, வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
Twitter Link: https://twitter.com/DoneChannel1/status/1344150196503019520?s=20
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)