இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகள்

விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று அறிக்கை வெளியிட்டாரா ரஜினி?
விஜயை எதிர்க்க சீமான் ஆதரவு கேட்டார் என்று ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டதாக பரவும் அறிக்கை போலியானதாகும். 2021 ஆம் ஆண்டில் ரஜினி மக்கள் இயக்கத்தை கலைப்பதாக ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கையை எடிட் செய்தே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடத்தியதா புதிய தலைமுறை?
“தேர்தலுக்கு முன் திமுகவை உடைக்கும் திட்டமா? உதயநிதி vs கனிமொழி” என்கிற தலைப்பில் புதிய தலைமுறை விவாதம் நடத்தியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும்.

ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?
ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அடுக்கப்பட்டு அமைந்திருக்கும் கற்கள் என்று பரவும் வீடியோ தகவல் தவறானதாகும்.


பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் உண்மையா?
பாஜகவின் இடைத்தேர்தல் களங்களின் தோல்வியைக் கொண்டாடும் தமிழிசை என்று பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)